நிகழாத நிகழ்கால கனவு

நிகழ் காலத்தில் நிகழாத ஒன்றை நிகழ்த்த... கிடைத்த நீங்காத வரமாக எண்ணி
"கனவில்" கரைத்தான் அந்த பெயர் இல்லா
ஒருவன்..
Part 1
காற்று கூட இல்லாத உலகம் அது..
உடல் உறங்கி கொண்டு இருக்க
உள்ளத்துடன் சிறிது உணர்வுகளை மட்டும் அவன்
அவ்வுலகத்திற்கு கடத்தி கொண்டு வந்திருந்தான்..
அவன் விடும் மூச்சு காற்று மட்டும் அங்காகே
காற்று குமிழிகளாக சுற்றி கொண்டிருந்தது...
(காத்து இல்லாத இடத்துல எப்படி மூச்சு னு கேள்வி கேட்க கூடாது..)
ஒளி கூட ஒழுங்காக இல்லாத இடத்தில்..
புதிதாக தோன்றிய ஒலியை நோக்கி அவனது பார்வை திரும்பியது..
மகிழ்ச்சியின் மறு உருவம் என்றால் கூட ஈடாகாது போல்..
அழகின் முற்று புள்ளியாக
அங்கே ஒருத்தி
இவனது மூச்சு குமிழிகளை உடைத்து விளையாடி கொண்டிருந்தாள் அந்த சிரிப்பின் இளவரசி..
கருவறை விட அமைதியான அந்த இடத்தில்..
இவன் இதய துடிப்பு சத்தம் மட்டும் இடியாய்
ஒலித்து கொண்டிருந்த தருணத்தில்...
அவள் சிரிப்பு சத்தம் மட்டும் ,மொழி இல்லா கவிதையாக இவன் காதில் இசையுடன் ஒலித்து கொண்டே இருந்தது..
சோகத்தை மட்டுமே சொந்தமாய் கொண்ட அவன் ..
உடைப்பது அவன் மூச்சு காற்று தான் என அறிந்திருந்தும்..
முதல் முறையாக உண்மையாக சிரித்தான்..
இதற்கிடையில் சிரிப்பின் இளவரசி
அந்த காற்று குமிழிகளின் உருவாகும் இடத்தை தெரிந்து கொள்ள முன்னேறி கொண்டிருந்தாள்..
அவளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற மூளையின் எண்ணத்தில் நகர்ந்த கால்கள்
அவள் அழகில் மயங்கிய உள்ளத்தின் , விட்டு விடாதே என்ற எண்ணத்தில் கால்கள் உறைந்தன
இவனை நெருங்கிய அவள் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தாள்
தன் சிரிப்பினை மட்டும் அந்த கண்ணில் கண்டாள்
தன்னை இவளவு அழகாக செதுக்கிய கண்களுக்கு நன்றி சொல்லியவாறு
அவன் மூச்சு காற்று குமிழிகளாக உண்டாவதை கண்டு திகைத்து நின்றாள்
உடைத்தது உன் மூச்சு காற்று தானா என்ற அவளின் கேள்விக்கு
ஓடும் நீரில் ஆடும் நாணலினை போல் தலைய அசைத்தான்
உடைத்த அத்தனை குமிழிகளையும்
உனக்கே
திருப்பி தருகின்றேன் என்று
பற்றிய பார்வையினை பறக்க விட்டு ..
அவன் இதழ்களை சிறை பிடித்தாள்..
-கனவுகள் தொடரும்