கற்பனை கதை

அன்று மாலை அவள் வீட்டில் பெண்பார்க்கும் வேலை நடந்துகொண்டிருந்தது, பெண்ணிற்கு திருமணம் பிடிக்கவில்லை இருந்தும் பெற்றவர்களுக்காக அவள் தன்னை அலங்கரித்து கொண்டிருந்தாள். அவள் குடும்பம் ஊரில் செல்வாக்குள்ள குடும்பம், அவர்கள் குடும்பம் எடுக்கும் முடிவுதான் அந்த ஊருக்கே வேதம் ஆனால் அந்த ஊரில் பெண்கள் படிப்பிற்கு முக்கியம் தர மாட்டார்கள். அந்த பெண்ணும் பள்ளி வரை படித்துவிட்டால், அவள் பள்ளி முடிக்க பல போராட்டமும் சந்தித்தால் அது வேறு கதை, அவள் கல்லூரி பயில ஆசை கொண்டாள் அதற்குள் அவளை மணமுடித்து கொடுக்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது.

மாப்பிளை வீட்டில் உள்ளவர்கள் வரும் நேரம் ஆகிவிட்டது. கைபேசி வசதி இல்லாத காலம் என்பதால் தொடர்புகொண்டு கேக்க முடியவில்லை எங்கு வருகிறார்கள் என்று. ஒரு கார் வந்தது அதில் மாப்பிளை வீட்டார் வந்தனர். மாப்பிளை வீட்டார் பக்கத்துக்கு ஊரில் உள்ளவர்கள், ஆனால் அவர்கள் பிள்ளைகள் வெளிநாடுகளில் படித்தவர்கள், அவர்கள் வீட்டில் ஒரு பெண் ஒரு ஆண் பிள்ளைகள் இருவரும் வெளிநாடுகளில் படித்து அங்கேயே வேலை பார்க்கிறார்கள்.

பெண் வீட்டில்,
தரகர் முன் செல்ல அவரை தொடர்ந்து மாப்பிளை வீட்டார் செல்கின்றனர். தரகர் வந்தவர்களை அறிமுகம் செய்கிறார், இது மாப்பிளை அப்பா, அவர் அம்மா, அவர் அருகில் இருப்பவர் மாமா, அடுத்துள்ளவர் மாப்பிளை என்று சொல்லி முடிப்பதற்குள் விக்கல் ஏறிட தண்ணி குடித்தார். ஆனால் அவர் சொல்ல வந்தது மாப்பிளை தங்கை என்று, மாப்பிளை தங்கை வெளிநாடுகளில் படித்து வேலை பார்ப்பதால் அவர் அங்குள்ள கலாச்சாரத்தில் ஆணின் உடை, ஆணின் பாவனைகள், ஆணின் தலை அலங்காரமுடன் இருப்பார். தரகர் மறுபடி அறிமுகம் செய்ய ஆரம்பிப்பதற்குள் பெண் வீட்டில் மாப்பிளை தங்கையை மாப்பிளை என்று நினைத்து கொள்ள அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

திருமண ஏற்பாடு நடந்தது,
மாப்பிளைக்கு வேலை காரணமாக விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட, திருமண தேதி கழித்து ஒரு மாதம் கழித்தே விசா கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இதை அறிந்த மாப்பிளை வீட்டார் திருமணத்தை ஒத்திவைக்க முடிவு செய்து பெண் வீட்டாரிடம் பேசினார். ஆனால் அவர்கள் மாப்பிளை வீட்டில் இருக்கும் போது எப்படி அவர் வர தாமதமாகும் என்று வாக்குவாதம் செய்ய அவர்கள் தவறாக புரிந்து கொண்டதால் இப்படி பேசுகிறார்கள் என்று எண்ணிய மாப்பிளை வீட்டார் அவள் என் மகள் மகன் அல்ல என்று கூறியும் அவர்கள் பெண்ணை பிடிக்காமல் இப்படி பேசுகிறார்கள் என்று எண்ணி கொண்டனர்.

இதற்கு முன் பெண் பார்க்க வந்தவர்கள் அந்த கிராம மக்களின் கோபங்கள் அவர்களின் அறியாமை கண்டு வெளி ஊரில் இருந்து வந்தவர்கள் எதோ காரணங்கள் சொல்லி பெண்ணை வேண்டாம் என்று சொன்னார்கள் அதனால் அவர்கள் இதே போல் ஒரு காரணம் என்று சண்டை போட வாதம் முற்றியது.

இதனால் அந்த ஊர் மக்கள் மாப்பிளை தங்கையை கடத்தி வந்து கட்டாய திருமண ஏற்பாடு செய்ய தயார் ஆனார்கள். அந்த வேலை மாப்பிளை தங்கை பெண்ணிடம் பேச அந்த பெண் இவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது, என்னை இந்த ஊரில் இருந்து கூட்டி சென்று விடுங்கள் நான் மேல்படிப்பு படிக்க விரும்புகிறேன் என்றாள். என்னை ஒரு நல்ல கல்லூரில் சேர்த்து விடுங்கள் என்று கெஞ்சினாள். என் பெற்றோர்கள் தலை குனிய கூடாது அவர்கள் கவுரவம், இதுநாள் வரை சேர்த்து
வைத்த பேர் குறைய கூடாது, நீங்கள் படித்தவர் என்பதற்காக நான் திருமணத்திற்கு சம்மதித்தேன், திருமணத்தின் பின் படிக்கலாம் என்று ஆசை கொண்டேன், அதனால் உங்களை மிகவும் பிடித்ததாக கூறினேன் அதனால் இவர்கள் உங்களை கடத்தி வந்தார்கள் என்று கூறினால். அதனால் அவள் நிலை உணர்ந்த மாப்பிளை தங்கை பெண்ணின் ஆசை லட்சியம் நிறைவேற்ற எண்ணினாள்.

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (3-Aug-18, 12:05 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : karpanai kathai
பார்வை : 541

மேலே