கஜினிகாந்த்

ஏன்டா மகனே உனக்கு ஆசையா நானும் உன்னோட அம்மாவும் 'ரஜினிகாந்த்' னு பேரு வச்சோம். இப்ப உனக்கு இருபத்தெட்டு முடியப்போகுது. உம் பேர மாத்தணும்னு அடம்பிடிக்கறயே. அது சரியா.
😊😊😊😊😊
நீங்க ரண்டும் பேருமே என்னச் செல்லமா வளத்துக் கெடுத்திட்டீங்க. மிகக் குறைவா மதிப்பெண் எடுத்த என்னை "தயவுசெய்து உங்க பையனை உயர்கல்வி படிக்க எந்தக் கல்லூரியிலயும் சேத்து அவன் வாழ்க்கையை நாசம் பண்ணாதீங்க"ன்னு என்னோட தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் உங்ககிட்டச் சொன்னாங்க. அவுங்கப் பேச்சக் கேட்காம பல லட்சம் கட்டி என்னை தனியார் மருத்துவக் கல்லூரில சேத்தீங்க. என்னால இன்னும் தேர்ச்சி பெற முடியல.
😊😊😊😊
பேர மாத்தினா தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கிடுவயா?
😊😊😊😊😊
சிவாஜி ராவ் பேர மாத்தி பெரிய நடிகராகிட்டாரு. கஜினி முகமது பதினேழு தடவ படையெடுத்துத் தோல்வி அடைஞ்சனாம். பதினெட்டாவது முறைதான் வெற்றி பெற்றானாம்.
😊😊😊😊😊
கஜினி முகமதுக்கும் நீ பேர மாத்தறதுக்கும் என்னடா ரஜினி சம்பந்தம்?
😊😊😊😊😊
சம்பந்தம் இருக்குதப்பா. எம் பேரக் 'கஜினிகாந்த்' னு மாத்தி கடைசியா ஒரு தடவ தேர்வெழுதி பட்டம் வாங்கப் போறேன்.
😊😊😊😊😊
சரிடா ரஜினி. இல்ல இல்ல. சரிடா கஜினி. உனக்காக மணல் கொள்ளைப் பணத்துல ஒரு மருத்துவ மனையை ஆறு மாசத்துக்குள்ள கட்டித் தர்றண்டா எஞ் செல்லக் கஜினிகாந்து.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆
திரைத் தமிழைத் தவிர்ப்பது கற்றவர்க்கு அழகு.

எழுதியவர் : மலர் (3-Aug-18, 3:08 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 172

மேலே