இன்னமும் சந்தேகப்படலாமோ - கீரவாணி
பல்லவி
இன்னமும் சந்தேகப்படலாமோ
அநுபல்லவி
பொன்னம்பலந்தனில் தாண்டவமாடிய
பொன்கழலை நினைவில் வைக்கத் தெரிந்த நீதான் [இன்னமும்]
சரணம்
அன்னமயமெனும் கோசம் தானே அந்தணர் முதல்
புலையர் வரைக்கும்
பின்னமறவே தோணுதே இந்தப் பேதமது காணேன்
தன்னையறி கிறதவமே பெரிதென்று
தரணியில் கோபாலகிருஷ்ணன்
சொன்னதெல்லாம் மறந்து இந்த மாயச்சுழலில்
வீழ்ந்தலைந்தாய் சிவ சிவநீ [இன்னமும்]
ML Vasanthakumari-Innamum-Keeravani-Chapu-Gopalakrishna Bharati என்று யு ட்யூபில் பதிந்து ML.வசந்த்குமாரி பாடுவதைக் கேட்கலாம்.
Sanjay Subrahmanyam - innamum sandEhappaDalAmO - kIravANi - gOpalakrishna bharati என்று யு ட் யூபில் பதிந்து சஞ்சய் சுப்பிரமணியன் பாடுவதைக் கேட்கலாம்.