கண்வழிப் புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே - பீம்ப்ளாஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், லலிதா, பத்மினி, ராகினி நடித்து ஆர்.எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் 1954 ல் வெளிவந்த திரைப்படம் தூக்கு தூக்கி. ஜி. ராமநாதன் இசையமைப்பில் அனைத்து பாடல்களுமே சிறப்பானவை.

கவிஞர் அ.மருதகாசி இப்பாடலை இயற்றி, சிவாஜி கணேசன், திருவாங்கூர் சகோதரிகளில் ஒருவரான லலிதா ஆகிய இருவரும் பாடல் காட்சியில் நடிக்க, டி.எம்.சௌந்தரராசன், எம்.எஸ்.ராஜேஸ்வரி இருவரும் இப்பாடலை ‘பீம்ப்ளாஸ்’ ராகத்தில் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். யு ட்யூபில் பார்த்தும், கேட்டும் ரசிக்கலாம்.

KANN VAZHI PUGUNTHU KARUTHTHINIL KALANTHA SSKFILM022 TMS, MSR @ THOOKKUTH THOOKKI

கண்வழிப் புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மவுனம் (கண்வழி)
வேறெதிலே உந்தன் கவனம் (4)

இன்மொழி பேசி ஏய்த்திட எண்ணும்
இதயமில்லாதார் கவனம் (இன்மொழி பேசி)
இழந்ததினால் இந்த மௌனம் (4)

வண்ணச்சிலையே..
வண்ணச்சிலையே வளர்பிறையே
வந்ததறியேன் மனக்குறையேன் (வண்ணச்சிலையே)

எண்ணம் வேம்பு
எண்ணம் வேம்பு மொழி கரும்பு
எனை பிரிந்த உன் மனம் இரும்பு (எனை பிரிந்த)

கண்ணே போதும் சொல்லம்பு
கண்ணே போதும் சொல்லம்பு
உனைக் கணமும் பிரியேன் எனை நம்பு

உண்மையில் என் மேல் உமக்கன்பு
உண்மையில் என் மேல் உமக்கன்பு
உண்டென்றால் இல்லை இனி வம்பு (உண்மையில்)

கண்ணில் தவழுதே குறும்பு
கண்ணில் தவழுதே குறும்பு
கனிமொழியே நீ எனை விரும்பு (கண்ணில் தவழுதே)

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே
கனிவுறும் காதல் ஜோதி (கண்வழி புகுந்து)
காண்போமே பாதி பாதி (4)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Aug-18, 11:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 439

மேலே