தாய்மொழிப் பகைதான் விடுதலையா - ஸாரமதி
சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 14 என்ற தலைப்பில் ஸாரமதி ராகத்தில் அமைந்த 'மோட்சமு க லதா' என்ற பாடலைக் கொடுத்திருந்தேன்.
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய 'இசைத் தமிழ்க் கலம்பகம்' என்ற நூலிலிருந்து 'விடுதலை தமிழுக்கு மாறன்மை' என்ற தலைப்பில், 'மோட்சமு கலதா' என்ற கீர்த்தனையின் 'ஸாரமதி' ராக மெட்டில் எழுதிய பாடலைத் தருகிறேன்.
பல்லவி:
தாய்மொழிப் பகைதான் விடுதலையா
...தன்மதிமானம் தானிலையா (தாய்)
அனுபல்லவி:
வாய்மையே சொன்னான் வாரதா
...வாணன் நற்காந்தி வகைதலையா (தாய்)
சரணம்
சேய்மை யாங்கிலச் சீமையிலுள்ள
...சிறந்த முக்கட்சிகளும் செறியுமொரே மொழியே
தூய்மை யாந்தமிழ் தோதிலா இந்தியினால்
...தொலைதல் திண்ணம் சொன்னான் மறைமலையே (தாய்)
- மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
இப்பாடலின் அருமையைப் பாடி மகிழுங்கள். பாடலிலுள்ள தமிழின் நயத்தை ரசியுங்கள்.