என்னவள் நீ மட்டுமே தேவதை இருக்கலாம்

இரண்டு இறக்கைகள் பொருந்திய
வானில் இருக்கும் பெண்ணோ
"தேவதை " என்பது பொய்யாக
இருக்கலாம் !
வெள்ளை உடை அவதரித்தவள்
அவளே "தேவதை " எனும் கூற்று
பொய்யாக இருக்கலாம் !
அழகு அவள் மட்டுமே
எனும் சொல் கூற்று அவள் தான்
"தேவதை " என்பது அதுவும் பொய்யாக இருக்கலாம் !
ஆயினும் அத்தனையும் பொய்யாகத்தான் படுகிறது !
ஏன் ?
"தேவதை " என்பவள் "கருப்பு புர்கா " வில்
ஒளிந்தும் மண்ணில் உலவிக்கொண்டிருக்கலாம் !
இதுவே மெய்யாக இருக்கலாம் !
அவள் ! என்னவள் நீ மட்டுமே ( தேவதை ) இருக்கலாம் !