மாயை அவள்

கிழக்கு திசையில் ஆதவன் போல்
தினம் உதிப்பாயே..
இருளில் பொழியும் நிலவினை போல்
அழகை கொண்டாயே...
இனிக்கும் நெஞ்சில் அமுதமாய்
சுரக்க வந்தவள் நீயோ..
சிலிர்க்கும் கண்கள் ஓரமாய்
காதல் தந்தவள் நீயோ.....

தீராத... ஆசைகளோ.....
தீர்க்கின்ற.... மௌனங்களோ ....

அனைத்திட வரும் பால்நிலவோ.. கார்நிலாவோ....
ஓர்கனாவை கானுமோ...
காற்றில் தொலைத்த கவிதை உன்னை
காதல் செய்ய கெஞ்சுமோ.....
பாவை இதயம் ஏற்க்குமோ.....
பெண் ஒருத்தி...இவள் என்னொருத்தி...

ககாத்திருப்பாளோ... கடஒளிந்திருப்பாளோ.....

துடிக்கும் நெஞ்சில் ஈரமாய்
துளிர்க்க வந்தவள் மாது....
அழகின் பதுமை போல் ஒரு
எனை இழுக்கும் ஏது
புன்னகையோ....
தேனுரும் பெண்ணிவலோ...
அருகினில் வரும்
வானமழையோ..
வருடும் காற்றோ...
வன்மமான மாயமோ...
கண்கள் தொலைத்த
வண்ணம் உன்னை
மீண்டும் ஒருமுறை காணுமோ.....
பார்வை மீண்டும் திரும்புமோ......

பெண்ணொருத்தி....
அவள் என்னொருத்தி.....

எழுதியவர் : ச. அரிக்குமார் (3-Aug-18, 4:58 pm)
சேர்த்தது : ச அரிக்குமார்
Tanglish : maiai aval
பார்வை : 110

மேலே