பாருள் காருள்

யாருடிச் செல்லங்களா நீங்க ரண்டு பேரும். வெளியூர் புள்ளைங்க மாதிரி தெரியுது?
😊😊😊😊
ஆமாங்க பாட்டிம்மா. நாங்க சென்னையிலிருந்து வர்றோம். அதோ நிக்குதே அந்தக் காருல தான் நாங்க எங்க அம்மா அப்பாகூட வந்தோம். ஊரச் சுத்திப் பாத்துட்டு இருக்கிறோம்.
😊😊😊😊
இங்க யாருக்காவது நீங்க சொந்தமா?
😊😊😊😊
இல்லீங்க பாட்டிம்மா. நாங்க இந்தி பேசறவங்க. சென்னையிலே பொறந்து வளந்ததால உங்கள மாதிரியே தமிழ்ப் பேசறோம். எங்கப்பா தொழிலதிபர். இந்த ஊர்ல தென்னை மரம் பனை மரத்திலிருந்து கெடைக்கற ஓலை, மட்டை இதையெல்லாம் வச்சு ஒரு தொழில் சாலையைத் தொடங்கப் போறாராம் எங்கப்பா. இருநூறு பேருக்கு வேலை கெடைக்குமாம். அதுக்குத் தான் உங்க ஊர்த் தலைவர்கிட்ட ஒரு அஞ்சு ஏக்கர் நிலம் வேணும்னு பேசிட்டு இருக்காரு.
😊😊😊😊
நல்ல மனுசன். மகராசனா இருக்கட்டும். நீங்க ரண்டு பேரும் செவச்செவனு இருக்கறதப் பாத்ததுமே நீங்க சேட்டுப் புள்ளைங்களா இருப்பீங்கன்னு நெனச்சேன். என் நெனைப்பு சரியாப் போச்சு. சரி உங்க பேருங்களச் சொல்லுங்கடி செல்லங்களா.
😊😊😊😊
நாங்க ரட்டைப் பிறவிங்க.
😊😊😊😊
அதான் உங்களப் பாத்த ஒடனே எனக்குப் புரிஞ்சு போச்சு. உங்க பேருங்களச் சொல்லுங்க.
😊😊😊😊
எம் பேரு பாருல். இவ பேரு காருள்.
😊😊😊😊
தமிழ்ல பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடுன்னு சொல்லுவாங்க. காருள்னா காருக்குள்ளயா.
😊😊😊😊😊
பாட்டிம்மா எங்க ரண்டு பேருக்கும் இந்தி பேசத்தான். எங்க பேருங்களுக்கான அர்த்தமெல்லாம் தெரியாது.
😊😊😊😊
சரிடீ கண்ணுங்களா போய் எங்க ஊரச் சுத்திப் பாருங்க.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Parul = graceful, flow of water
Karul = innocent