அகநாட்டின் அழகி

அகநாட்டின் அழகி இவள்
அகமெல்லாம் நிறைந்து
என்னுயிரில் கலந்த அழகே

வயலெல்லாம் நட்டு வைத்து
நாடெல்லாம் செல்வம் பொழிந்திடவே
கிராமத்துப் பைங்கிளியாக உறவாடும் உறவே

பட்டு வண்ண சேலை உடுத்து
பக்குவமாய் பண்பாட்டை பயின்று வரும்
பண்புடையவளே

இளநகையில் இதமாய் இதயமெல்லாம்
நிறைந்த அன்புடையவளே

அஞ்சுகமாய் கதை பேசி
அஞ்ஞையாக பாசம் நல்கும்
அகமுடையாளே

புதுமையான உன்னழகு மிக இனிமை தந்திடவே
திகைத்து நிற்கின்றேனே பெண்ணே

குளற்கரைக்கு குமரியிவள் குளிக்க வந்தால்
குளத்து வாழ் கயல்களெல்லாம்
குதுகலித்துக் கொண்டாடிடுமே

பாவையிவள் பாதம் தேய்க்கும் வரை
பாவம் போக்க தவம் கிடக்கும் பாறைகளும் அங்கே
குளிர்த்து விட்டு கரையேற குளிர்ந்த நீர் பருக
ஓடிவந்து தாகம் தீர்க்கும் காளைமாடுகள் அங்கே

மெருதுவான விரல்களால்
மலர்களைப் பறிக்கும் வரை
வரம் கிடக்கும் பூச்செடிகளும்

முத்து முத்தாக பேசுகையில்
சொத்தாக இடம்பிடிப்பாளே சீதேவியாக

குறையாத பாசம் பகிர்ந்து
நிறைமதி போல அவள் எந்நாளும்
ஒளிவிசிடுவாள்

பொன்னாக விளைந்து நிற்கும்
நெற்கதிர்கள் இவள் அழகைக்கண்டு
வாழ்த்தொலிகள் வழங்கிடுமே ஒன்றோடு ஒன்று மோதி

குயிலோடு போட்டி போட்டு இவள் குரல் வென்று விட
குயிலினங்கள் வெட்கம் கொள்ளுமே

மயில்கள் இவள் கார்குழலென அறியாது
கார்மேகமென தோகை விரித்தாடிடுமே

பண்மணி சலங்கை ஓசை
இறைவனின் பண்பாடும்
தியானம் கொண்ட இறைவனும் மெய் மறந்து
இவள் அழகில் முழ்கிடுவார்

பச்சைப் புற்தரையில்
இளம் பாதம் பதிக்கையிலே
இச்சை ஊறி இதயம் இன்னுயிர் தாவுதே
கொள்ளை அழகையும்
களவாடிச்செல்கின்றாள்
வதன அழகாலே

சுந்தரியின் கண் பார்வை
மஞ்சரி வாசம் வீசும்
நெஞ்சத்தில் அமர்ந்தவளே
நிம்மதியைத் தந்தவளே

மெய்தகையோடு மென்மை கொண்டவளை
தொன்மை பேசுதடி உன் அழகை
கண்மை பூசி நீ போகையிலே
கண்ணிமைக்காமல் பார்த்து
புண்ணியம் பெறுவதாக பெருமை பேசுவாரடி
இளந்தாரிகள்

அகிற்குழம்பு வாசம் கமழும்
அடுத்தவரை கடந்து இவள் செல்கையிலே
இவள் அழகை மெச்சிக்கவி படைக்க
எழுதுகோள் என்னிடம் அடம்பிடிக்கும்..

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (7-Aug-18, 10:25 am)
பார்வை : 487

மேலே