அவளழகி
இளமைப்பொங்கும் இவள்
மேனியழகு என் மனதைக்
கொள்ளைக்கொண்டது உண்மை,
அவளோடு பேசி பழகியபோது
தெரிந்துகொண்டேன், இவள்
அகத்தின் அழகோ அவள்
புற அழகையும் மிஞ்சியது;
இன்னும் வியக்கையிலே -நான்
தெளிந்தேன் ஓ,இந்த அகத்தின்
அழகல்லவோ அவள் முகத்தின்
அழகானது ,அவளுக்கு
அழகென்று பேர் வைத்தனரே
பெற்றோர். அது என்ன பொருத்தம்
வஞ்சி இவளுக்கு , என்னவளுக்கு.,