கடவுளிடம் கேட்டேன்

என்னை அன்பாக
அனைத்து ஆறுதல் சொல்ல

ஒரு உறவு வேண்டும் என்று
கடவுளிடம் கேட்டேன்

"தாயை" தந்தார்

என் தோல்விகளில்
தோள் தட்டி
துணை நிற்க

ஒரு உறவு வேண்டும் என்று
கடவுளிடம் கேட்டேன்

"தந்தையை" தந்தார்

என் மேல் என்னை விட
பாதுகாக்க

ஒரு உறவு வேண்டும் என்று
கடவுளிடம் கேட்டேன்

"அண்ணாவை" தந்தார்

என்னை பற்றி என்னை விட
அதிகமாக தெரிந்த

ஒரு உறவு வேண்டும் என்று
கடவுளிடம் கேட்டேன்

"அக்காவை" தந்தார்

என் கையை பிடித்து
என் வாழ்க்கையை முன்னேற்ற

ஒரு உறவு வேண்டும் என்று
கடவுளிடம் கேட்டேன்

"ஆசிரியரை" தந்தார்

எல்லாம் தந்ந
கடவுளிடம்
இது எல்லாம் சேர்த்து
ஒரு உறவாய் தர முடியுமா

என்று கேட்டேன்

சற்றும் யோசிக்காமல்

உன்னை காட்டினார்

❤தோழி/தோழன் ❤என்று

👭👫👫👭👬👬👭👭👫

எழுதியவர் : தாரா (9-Aug-18, 11:03 pm)
Tanglish : kadavulidam KETTEN
பார்வை : 611

மேலே