மறைந்து விட்ட பகலவன்

மறைந்து விட்ட பகலவன்

தமிழ் பெருமையின்
மிச்சமும் மறைந்தது

அதனின் அருமை
அன்று தெரிந்தது

கட்சி மத பேதமின்றி
கண்களில் கண்ணீர் வழிய
விடை கொடுத்து அனுப்பி
வைத்த மக்கள் !

படைப்பின் இலக்கணம்
வார்த்தையின் வீச்சு
எதிராளியையும் ஏங்க
வைக்கும் சொல் நயம்
எல்லாம் இழப்பு

இனி இந்த குரலும்
வார்த்தை வீச்சும்
எங்கள் கால முடிவின்
வரைக்கும்
இனி காண்போமா?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Aug-18, 10:28 am)
பார்வை : 222

மேலே