நட்பு
நட்பு
உதிர உறவில்லை!
உதிரா உறவாவான்!
சாதிக்காரனில்லை!
சாதிக்க காரணமாவான்!
அண்டை வீட்டானில்லை!-நமை
தீமை அண்ட விட்டானில்லை!
மந்திரக்காரனில்லை!
பாரம் பஞ்சாக்கவல்ல
தந்திரக்காரனவன்!
விட்டுக்கொடுத்திடுவான்!
நமை
விட்டுக்கொடுக்க மாட்டான்!
நட்பென்று நாம் இங்கு பகர்வது...
அன்பு சார் மனங்களில் காலம் காலமாய் நிகழ்வது...
அதனாலோ பார் இங்கு நில்லாமல் சுழல்வது...