The little man and the fatmanகுட்டிமனிதனும் குண்டுமனிதனும்

குண்டு மனிதனும் குட்டி மனிதனும்
The little man and the fat man(ஜப்பான் நகரங்களில் வீழந்த குண்டுகளின் பெயர்கள்)

அன்றொரு தினத்தில்
அடுத்தடுத்த நகர்களில்
குண்டுமனிதனும்
குட்டி மனிதனும்
குதூகலமாய் குதித்து
கொட்டமடித்தனர்

உழைப்பால் உயர்ந்த
குள்ளர்கள் நகரை
அழிக்க வந்த
கள்ளர்கள் அவர்கள்!

கதிர் கதிராய் அறுத்தனர்
மனிதப் பயிர்களை...
உருக்குலைத்து சிதைத்தனர்
கருவறையிருந்த சிசுக்களை..

மற்றுமுள்ள பேர்க்கெல்லாம்
புற்றுநோய் பரிசில்கள்!

ஏதம் இல்லா
பூதங்கள் ஐந்தும்
நஞ்சாய் மாறின
வஞ்சகர் சதியால்..

பயிர் விளைச்சலிலே
இன்றும் கூட
கதிர்இயக்கத்தின் எதிரொலி!

காணலாம் இன்றும்
அந்நகர மக்களின்
கண்களில் ஈரம்!

கேட்கிறோம் இன்றும்
அம்மக்கள் அமைதி!அமைதி!
என அலறும் அலறல்!

கண்டும் என்ன?
கேட்டும் என்ன?

குண்டுகள் இன்னும் ஒழிந்தபாடில்லை!
கொலைப் பயணமும்
இன்னும் தொலைந்தபாடில்லை!

உலகினில் அமைதி
கேள்விக்குறியா?

சகாயம் கேட்க
சக மனிதனை
நாடினால்
குட்டி மனிதனும்
குண்டு மனிதனும்
அவனை மாற்றி
இருந்தனர் மனித வெடிகுண்டாய்.....

எழுதியவர் : Usharani (10-Aug-18, 9:02 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 92

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே