நட்பு

எக்கணமும் ஒன்றாய்
இருவரும் நன்றாய்
ஆடைத் தெரிவிலும்
அணிவிலும் சரிசமமாய்
தனது தலையணையில்
தலைவைக்கும் மறுதலையாய்
காதலுக்கு காவலனாய்
காதலிக்குத் தூதுவனாய்
குற்றம் இருப்பினும்
தோள்கொடுக்கும் துணையாய்
எதிர்ப்போரை எதிர்ப்பதில்
எம்மோடு சரிநிகராய்
ரகசியம் காப்போனாய்
கவலைகள் தீர்ப்போனாய்
தட்டைப் பறித்துத் தாராமல்
உண்ணும் போக்கிரியாய்
கை பேசியில் அவள்
பரிமாறிய தகவல்களை
கரவாகப் படித்து மிரட்டி
வெருட்டும் படுபாவியாய்
இந் நட்புக்குள் ஒளிந்திருக்கம்
சூட்சுமங்கள் தான் எத்தனை
சுக அனுபவங்கள் தான் எத்தனை
சண்டைகள் ஆகும் தடயமே
இல்லாமல் அதுமாறிப் போகும்
குதூகலிப்பும் மகிழ்வும் அங்கு ஆகும்
கோபங்கள் தாபங்கள் அங்கு சாகும்
வாழ்வின் உயர்வு தாழ்வுகள்
வருமான ஏற்ற இறக்கங்கள்
இங்கு ஒரு போதும் வருவதில்லை
அதன் தாக்கம் இங்கு தெரிவதும் இல்லை
ஆறில் தொடங்கியது வாழ்வின்
அந்தம் வரை அப்படியே
தோழர் நெஞ்சங்களில்
விலகாமல் பிறழாமல்
கோலோச்சும் நட்பே
இந்த மண்ணும் மனிதமும்
வாழும் காலமெல்லாம்
உன் பணியை நீ ஓயாது செய்க

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (11-Aug-18, 12:03 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : natpu
பார்வை : 926

மேலே