நடனம் ஆடினார் - வசந்தா

தாளம்: அட

பல்லவி

நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த (நடனம்)

அநுபல்லவி

வடகயிலையில் முன்னாள் மாமுனிக்கருள் செய்தபடி தவறாமல்
தில்லைப்பதியில் வந்து தை மாதத்தில் குரு பூசத்தில் பகல் நேரத்தில் (நடனம்)

சொல்கட்டு ச்வரம்

தாம் தகிட தகஜம் தகணம் தரிகும் தரிதீம் திமித தகஜம் தகிணம் தத னீ ச ரி ச ரி சா சா

சரணம்

அஷ்டதிசையும் கிடுகிடென்று சேஷன்தலை நடுங்க அண்டம் அதிர கங்கை துளி சிதற பொன்னாடவன் கொண்டாட
இஷ்டமுடனே கோபாலக்ருஷ்ணன் பாட சடையாட அரவு படமாட அதிலே நடமாட தோம்தோமென்று பதவிகள் தந்தோமென்று (நடனம்)

Bharat Sundar Live - Carnatic Music - naTanam AdinAr என்று யுட்யூபில் பதிந்து பரத் சுந்தர் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Aug-18, 12:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 1140

மேலே