அறிவுடையோர் பணிந்தேத்தும் – சக்ரவாகம் ராகம்
பல்லவி:
அறிவுடையோர் பணிந்தேத்தும் தில்லை
அம்பல வாணனே எனை ஆளாய் (அறிவுடையோர்)
(கனக சபாபதியே எனை ஆளும் (அறிவுடையோர்)
அநுபல்லவி
மறை முடியும் தேடி அறியாத உன் திருவடியை
மாணிக்கவாசகர் கண்டதெப்படி (அறிவுடையோர்)
சரணம்
கனவிலும் நனவிலும் விஷயாதி சம்சாரக்
கடலில் அழுந்தினேன் கரை ஏற வழி காணேன்
மனமிரங்கி அருள் செய்திட வேணும்
மாயன் கோபாலக்ருஷ்ணன் வணங்கும் மலர் பாதனே
உனை மறந்திடப்போமோ உன்னடியார்களின்
உண்மையை இன்னமும் உணராமற்-கெடலாமோ
மனைவி மக்கள் தன தான்யமென்றிந்த
மாயவலைக்குள் சிக்கி மயங்கினேன் தயங்கினேன் (அறிவுடையோர்)
Seerkazhi Govindarajan-arivuDaiyOr-cakravAkam என்று யுட்யூபில் பதிந்து இப்பாடலை சீர்காழி S.கோவிந்தராசன் பாடுவதைக் கேட்கலாம்.
arivuDaiyOr paNindEttum tillai - Chakravaham - Gopalakrishna Bharati - Dr. Seerkazhi Govindarajan என்று யுட்யூபில் பதிந்து இப்பாடலை சீர்காழி S.கோவிந்தராசன் பாடுவதைக் கேட்கலாம்.