அவள் நிலவு
தூரிகை எடுத்து
தூரத்து நிலவை
கோடுகளால் தீட்ட நினைத்த போது
நிலவு முகிலில் மறைய
இவள் அருகில் வர
எழுதி முடித்தேன்
எட்டிப் பார்த்தது நிலவு பொறாமையில்
இனி உனக்கு வாய்ப்பில்லை
இவள் அருகில் இருக்கையில்
வானில் நீ வந்தால் என்ன வராவிட்டால் என்ன
எனக்கு கவலையில்லை !