கணவன்-மனைவி
ராமனுக்கு பின்னே சீதை
கண்ணனுக்கு பின்னே ருக்குமிணி
கணவனுக்குப் பின்னே மனைவி
கண்போல் அவளைக் காத்து நிற்க
அவர்கள் காட்டிய பாதையில்
அவனுக்குப் பின்னே அவள்
அவன் கணவன் அவள் மனைவி
அவளுக்கு கண் அவனாய் கணவனாய்
கண்போல் மனைவியைக் காத்து
வாழ்தல் கடவுளர் புவியில் மனிதராய்
அவதரித்து நமக்கு வாழ வழி வகுத்தது