கிண்டம்

மாமா, இன்னும் மூணு மாசத்தில நீங்க தந்தையாகப் போறீங்க. சில அறிகுறிகளை வச்சும் என்னோட நாடியப் பிடிச்சுப் பாத்தும் எங்க ஊரு மருத்துவப் பாட்டி பேச்சியம்மாள் எனக்கு ஆண் குழந்தை தான் பொறக்கும்னு சொன்னாங்க. அவுங்க எத்தனையோ கர்ப்பிணிப் பெண்களுக்கு இதுபோல சொன்னதில ஒண்ணுகூட தவறாப் போனதில்லை. நம்மைப் பையனுக்கு என்ன பேரு வைக்கலாம்னு சொல்லுங்க.
😊😊😊😊
பையன் பொறக்கப் போறானா? ரொம்ப சந்தோசம் கண்மணி. அவனுக்கு 'ரிஷி' -ன்னு பேரு வச்சிருலாம்
😊😊😊😊😊
'ரிஷி' நல்ல பேருங்கதாங்க மாமா. ஆனா வயசான உங்க தாத்தா பாட்டி, எங்க தாத்தா பாட்டி, அம்மா, அப்பா எல்லாம் நம்ம பையம் பேரக் கண்டிப்பா சரியா உச்சரிக்கமாட்டாங்க. ரிசி, ரிசின்னு கொஞ்சுவாங்க. அதனால நான் ஒரு ரிஷியோட பேர முடிவு பண்ணீட்டேன்.
😊😊😊😊😊
என்னோட ஆர்வத்தைத் தூண்டாம சீக்கிரம் அந்தப் பேரச் சொல்லு கண்மணி.
😊😊😊😊
அது பண்டைக் காலத்தில வாழ்ந்ததா சொல்லப்படற ஒரு ரிஷியோட பேரு.
😊😊😊
சீக்கிரம் சொல்லு
😊😊😊😊😊
அந்தப் பேரு 'கிண்டம்'
😊😊😊😊
ஆஹா...அருமை. புதுமை. இந்தப் பேர உலகத்தில எந்தக் கொழந்தைக்கும் வச்சிருக்கமாட்டாங்க.

எழுதியவர் : மலர் (14-Aug-18, 9:37 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 142

மேலே