இன்பம் மலர்கிறது
பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையில் மின்மினி பூச்சி போல உன் நினைவுகளை எனக்குள் சமிக்கை காட்டி தனி ஒருவனாய் பயணிக்கிறேன்!
கண்கள் ஜன்னலுக்கு வெளியே வட்டமிட்டாலும், என் சிந்தைக்குள் உன் கிளிப்பேச்சின் மொழி மட்டும் ரீங்காரமிடுகிறது!
குளிர்ந்த தென்றல் என் தேகம் தீண்டும் போது உன் துப்பட்டாவின் வருடல், எனக்குள் மயில் இறகாய் எனக்குள் வருடி செல்கிறது!
நான் சுவாசிக்கும் மூச்சு காற்று கூட,
உன் தலையில் சூடியிருக்கும் மல்லிகைப்பூ வாசத்தை எனக்குள் மணக்க செய்கிறது!
உன்னை என்னும் போது
ஏனோ!
ஒரு இனம் புரியாத இன்பம் எனக்குள் மலர்கிறது!