உணவும் காதலும்

கூடைக்குள்ளே குடுவை
குடுவைக்குள்ளே பழைய கஞ்சி
பச்சை மிளகாய் இரண்டு இருக்கு
மாமா காலையிலே கை நனைக்கிலே
வயல் வேலைனு காடக்காத

மதியம் பசி எடுக்கும்
தூக்குச் சட்டி ஒன்னுருக்கு
தினை சோறு உள்ளிருக்கு
தீயாத கருவாடு
திரியாத மோர் இருக்கு
மாமா நேரத்திதோடு சாப்பிடு

மாலையிலே நேரத்தோடு வந்துவிடு மாமா
வாசல் படியில் நான் காத்துக்கிடகேன்
களி கிண்டி
கையிலே கூட்டாட்டி
கழுத்தணி குண்டாவில்
கறி குழப்பு இருக்கு மாமா
காத்திருக்க வைக்காதே
இரவு குளிர்கிறது
விளக்கின் நிழலும்
அதன் இணைதேடி செல்கிறது
கரு மேக கூட்டில்
சாய்ந்தாடும் சந்திரனும்
விழியோரம் கடக்கிறான்

உன் கண்ணகுழி சிரிப்பை
இன்னம் காணலையே

எழுதியவர் : சண்முகவேல் (26-Aug-18, 12:06 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : unavum kaathalum
பார்வை : 185

மேலே