ஒரு நான்கு வரி கவிதை...
ஒரு நான்கு வரி கவிதையால் என்னவெல்லாம் செய்துவிட முடியும்...???
மறுத்துப்போன இதயமும்
சொறனை பெரும்...
ஆக்சிஜனோடு
ஆனந்தமும்
வந்துசேரும்..
அடிமனசெங்கும்
ஆட்டமென்ன
பாட்டமென்ன
கொண்டாட்டமே...
காற்றோடு பேசி
சிரிக்கலாம்
காக்கா குருவியையும்
மடியில் ஏந்தி
கொஞ்சலாம்...
என்னவெல்லாம்
செய்துவிடும்
அந்த நான்கு வரி கவிதை....
பெண்பேசிய
கவிதையானால்
ஆல்ககால் இல்லாமலே
கிக்கேரும்...
கவிதை வரிகளில்
சந்தனம் ஜவ்வாது மட்டுமல்ல
மருதாணி
வளையல் சத்தமும் வீசும்...
வாசிக்க வாசிக்க
மனம்கமழும்
மண்வாசனை
கூந்தல்மனமும் வீசும்...
பெண்பேசும்
கவிதை படிப்போருக்கு
பாதியிலே
தலைக்கேரும் போதை....
ஒரு நான்குவரி கவிதை என்ன வெல்லாம்
செய்துவிடும்...
இராஜாவினை
வம்புக்கிழுக்கும்..
தென்றலோடு
திமிராய்
தீண்டும்...
நெஞ்சோடு
கட்டியனைத்து
காதல் கொள்ள வைக்கும்...
படிக்க படிக்க
உதட்டில்
முத்தம் விழும்
நுனிநா ருசிக்கும்...
கவிதைகள் வெரும்
எழுத்தல்ல
அது மாயவரம்...
எல்லாம் செய்யும்
ஒரு நான்கு வரி கவிதை...
..##சேகுவேரா சுகன்...