தொண்டைமண்டலத் திருமுனைப்பாடி நாட்டின் தலைநகரம் முனைப்பாடி -------------------------தொண்டைமண்டலத்முனைப்பாடியார்--- அறநெறிச்சாரம் ஆசிரியர்
அறநெறிச்சாரம் நூலைப் பாடிய முனைப்பாடியார் காலம் 13 ஆம் நூற்றாண்டு.
திருமுனைப்பாடி நாடு இடைக்காலச் சோழமண்டலத்தில் இருந்த ஒரு நாட்டுப் பகுதி. தொண்டை மண்டலத்திலும் ஒரு திருமுனைப்பாடி நாடு இருந்தது.
நரசிங்க முனையதரையர் என்னும் நாயனார் தொண்டைமண்டலத்தில் இருந்த திருமுனைப்பாடி நாட்டை ஆண்டுவந்த அரசர்.
இராசராச வளநாட்டின் ஒரு பகுதியாகத் திருமுனைப்பாடி நாடு விளங்கியது என்று இரண்டாம் இராசாதிராசன் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இந்த நாட்டிலிருந்த ஓர் ஊர் திருநாவலூர். சைவக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் இந்தத் திருநாவலூரில் பிறந்தவர்.
பெண்ணாடகம், துறையூர் அகிய ஊர்களும் திருமுனைப்பாடி நாட்டில் அடங்கியிருந்தன.
தொண்டைமண்டலத் திருமுனைப்பாடி நாட்டின் தலைநகரம் முனைப்பாடி. இந்த ஊரில் வாழ்ந்த முனைப்பாடியார் அறநெறிச்சாரம் என்னும் நூலை இயற்றினார். இவர் சமணர் எனத் தெரிகிறது.
மகாபாரதக் கதையைத் தமிழில் பாடிய வில்லிபுத்தூரார் பிறந்த ஊர் தொண்டை மண்டலத்துத் திருமுனைப்பாடி நாட்டுச் சனியூர்.
அறநெறிச்சாரம் பாடிய முனைப்பாடியார் தொண்டை மண்டல முனைப்பாடியில் வாழ்ந்த புலவர் எனத் தெரிகிறது.