மனம் தேடும் மனிதம்

மனம் தேடும் மனிதம்"
கவிதை நூல் வெளியீடு !
----------------------------------------

எனது மூன்றாவது கவிதை தொகுப்பு நூல்,

"மனம் தேடும் மனிதம் "

இனமானக் காவலர் பேராசிரியர் திரு க .அன்பழகன் அவர்கள் திருக்கரங்களால் இன்று காலை வெளியிடப்பட்டது .

முதல் பிரதியை சென்னை சட்டக்கல்லூரி முன்னாள் துணை முதல்வரும் ,எங்கள் உறவினருமான பேராசிரியர் திரு அ. ர. சனகன் அவர்கள் பெற்றுக் கொண்டார் ..

பேராசிரியர் திரு க அன்பழகன் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவர் மட்டுமல்ல, எங்கள் தாத்தாவிடம் அதிகம் அன்பும் மரியாதையும் பாசமும் கொண்டவர் .நாங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ,அவரின் இல்லம் சென்றும் ,எங்களை அறிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் நலம் விசாரித்து ,இந்தநூலை வெளியிட இசைந்தது மிகவும் ஆனந்தம் கொள்ள செய்தது . எங்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து நலம் விசாரித்து விவரங்களையும் கேட்டறிந்தது , மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது .

உண்மையில் இன்று நடந்தது ஒரு எதிர்பாராத, திட்டமிடாத நிகழ்சசியாக அமைந்த ஒன்றாகும்.

அதே போன்று பேராசிரியர் திரு அ ர சனகன் மாமா அவர்கள் எங்கள் மீது மிகவும் அன்பும் அக்கறையும் கொண்டவர் .சிறு வயது முதல் எங்களிடம் பாசமுடன் வயது வித்தியாசம் பாராமல் பழகுபவர் .அவர் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது .

இன்று என் வாழ்வில் மற்றுமொரு மறக்க முடியாத இனிய பொன்னாள் .

எனது நூலுக்கு அணிந்துரை வழங்கிய புதுச்சேரி திரு அமிர்தகணேசன் (எ ) அகன் அவர்களுக்கும் ,ஆய்வுரை வழங்கிய மதுரை பிரபல கண் மருத்துவர் ஐயா திரு வ க கன்னியப்பன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

அதே போல் வாழ்த்துரை வழங்கிய கவிஞர் பெருமக்கள் ,

ஹைக்கூ புகழ் திரு கா ந கல்யாணசுந்தரம் ,
கவிச்சுடர் திருமதி சாரதா க சந்தோஷ் ,
கவிநெஞ்சன் திரு ராஜகோபால் ,
எழுத்தாளர் திருமதி மேகலா ராமமூர்த்தி
பைந்தமிழ் செம்மல் திருமதி சியாமளா ராஜசேகர்
கவிச்சுடர் திருமதி சொ .சாந்தி ,
கவிஞர் திரு சிவானந்தம் நடராசன் ,

அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

நூல் வடிவாக்கம் தந்த திரு லோகராஜ் மற்றும் உமையாள் அச்சகம் உரிமையாளர் திரு ரகுராமன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

அன்புடன்

பழனி குமார்
30.08.2018

எழுதியவர் : பழனி குமார் (30-Aug-18, 5:16 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 668

மேலே