கடைசி நாள்

இந்த நொடி இந்த நிமிடம்
இன்னும் எத்தனை நாட்களுக்கு

கதை கதையாய் பேசினாலும்
அதை சலிக்காமல்கேட்கும் தோழிகள்
இன்னும் எத்தனை நாட்களுக்கு

எவ்வளவு தான் அடித்தாலும்
தாங்கி கொள்ளும் மேசைகள்
இன்னும் எத்தனை நாட்களுக்கு

சிறுபிள்ளைபோல் கிறுக்கினாலும்
ஏற்றுக்கொள்ளும் கரும்பலகை
இன்னும் எத்தனை நாட்களுக்கு

சொல்வது எதையும் கேட்கவிட்டாலும்
சகித்துக் கொள்ளும் ஆசிரியர்கள்
இன்னும் எத்தனை நாட்களுக்கு

செல்ல செல்ல சண்டைகளும்
சின்ன சின்ன சிரிப்புகளும்
இன்னும் எத்தனை நாட்களுக்கு

கல்லூரிக்கு வந்த பின்னும்
குழந்தைகளை போல் விளையாட்டு
இன்னும் எத்தனை நாட்களுக்கு

இவைகளெல்லாம் முடிகின்றதருவாயில்
கல்லூரில் கடைசி நாள்...

எழுதியவர் : புவனேஸ்வரி (31-Aug-18, 11:38 pm)
Tanglish : kadasi naal
பார்வை : 3802

மேலே