ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்.....

கல்வி வரம் தந்த
கடவுளே

ஆயிரம் விதைகளை
விதைத்த
பூந்தோட்டமே

களிமண்ணும்
பொற்சிலையாகுமே
உந்தன்
கை வண்ணமே

கல்வி மழை
பொழியும்
கார்முகிலே
அதை
அள்ளி தினம்
பருகும் மண்ணின்
மைந்தர் குலமே

அறிவு
எண்ணத்தை
ஏற்றி வைத்த
சுடர் விளக்கே

கல்லாமை
இருள்
போக்கும்
ஒளி தீபமே

ஏணியாக
நீ
இருந்து
ஏறிச்சென்று
வானம் தொட்ட
வசந்தங்கள்
எத்தனையோ

நிழல்
தரும் ஒரு மரம்
ஊருக்கு

ஒரு ஆசிரியர் நீ
உலகுக்கே !

உனை
தினந்தோறும்
போற்றி தாள்பணிய
வேண்டும்
உன் திருத்தொண்டு
புகழ
இந்நாள்
விட்டுத்தர வேண்டும்
ஆசிரியர் தினமாக !!!

எழுதியவர் : த. பசுபதி (5-Sep-18, 10:15 pm)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 1331

மேலே