குருவே சரணம்

குருவே சரணம்

முதல் வகுப்பில் என்னை ஓட ஓட விரட்டி பயிற்றுவித்த எபன் டீச்சரே
பள்ளியில் அம்மா என்று போது நான் உன் ஆசிரியை என்று கண்டித்த அம்மாவே

புதுப்பள்ளியில் திண்டாடிய போது என்னை திடப்படுத்திய ராதாபாய் ஆசிரியையே
உன்னால் முடியும் என்று என்னை உயர்த்தி கைதூக்கிவிட்ட செல்லபாண்டியரே

தமிழால் நீ என்றும் வாழ்வாய், உவகை கொள்வாய் என்று முன்மொழிந்த ரகுபதியாரே
விளையாட்டு,சாரணர்,தேசிய சேவையை வளர்த்த நெல்லையாரே,பச்சையப்பரே

உன் பலவீனத்தை சீர் செய்தால் சிறப்பாய் வாழலாம் என ஊக்கமுட்டிய நடராஐரே
உன்னால், உன்னால் மட்டுமே முடியும் என என்னை உற்சாகப்படுததிய ஜெயசீலரே

விடாமுயற்சி இருந்தால் தேர்வு பெறலாம் என ஊக்கமுட்டிய ராமசுப்பிரமணியரே
பொறியியல் கணிதத்தை கதைகளால் எளிதாக கற்றுக்கொடுத்த ராமரே

ஒழுக்கமும், காலந்தவறாமையும் இன்றியமையாதது என வலியுறுத்திய ஜெனரல் ஜெயராஜே
அனபும் ஆதரவும் காட்டி என் முதுகலைப் படிப்பிற்கு உறுதுணயாய் இருந்த ஜெபராஐரே

இவர்களுக்கும், என் வாழ்க்கைப் பாதையில் என்னை உருவாக்கிய அனைத்து குருக்களுக்கும், மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும்

என் உளங்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ராரே

எழுதியவர் : ராரே (6-Sep-18, 8:39 am)
சேர்த்தது : ராரே
Tanglish : GURUVE saranam
பார்வை : 75

மேலே