மீசை

மீசை.....

முகத்தில்
முடி எழுதும்
முதல் கவிதை

அரும்பிய நாள்
முதலாய் விரும்பியே
அதை தழுவ
ஓடிடும் கை
விரல்கள்

மீட்டிடும்
வீணையை போல

ஈரேழு பருவத்தில்
துளிர்கின்ற
முடியதனில்
ஆண்பிள்ளை அடையாளம்
வெளிக்காட்டும்
தினந்தோறும்

முடிவுறா வானத்தில்
வெண்ணிற
மின்னல்கள்

முகத்திலே
பளிச்சிடும்
நரை என்ற பெயரதற்கு

ஆசைக்கு
அழகழகாய்

தீட்டிடும்
ஓவியம் போல்

விதவிதமாக
வளர்த்திடும் மீசையின்
வேட்கைக்கு
குறைவில்லையே

வீரத்தின்
குறியாக
பார்த்திருந்த
மீசை இன்று
நாகரீக
வளர்ச்சி என்று
இல்லாது
போனதென்ன ...

எழுதியவர் : த பசுபதி (6-Sep-18, 10:50 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : meesai
பார்வை : 525

மேலே