அரசியல்

அரசியல்
சேற்றிலே
முளைத்திருந்த
முள் அது
முல்லையது
என்றெண்ணி
தலையிலே
சுமந்து வந்தோம்
உண்மை
கண்ட பின்னே
தரையிலே
வீசும் முன்னே
தலைக்குமேல்
சென்றுவிட்டான்
தடுக்க இயலவில்லை

சுயநல
சுகவாசிகள்
தன்னை
முன் நிறுத்தி
முழுதும்
அபகரிக்கும்
முழு நேர
களவாடிகள்

அமுதமாய்
பேச்சிருக்கும்
ஆழ்ந்த அன்பிருக்கும்
சூழல் இது
புரியாமல்
சூழ்ந்திருக்கும்
நாமெல்லாம்
வீழ்ந்து இருப்போம்
தஞ்சம் என்று
அவன்
காலடியில்
தலைவன் என்று

உறவாடும் தருணம்
எல்லாம்
தயங்காது
சொல்லிடுவார்
நான் இருப்பேன் உனக்கு என்று

உழைப்பை எல்லாம் உறிஞ்சி விட்டு
உதாசீனம் படுத்துவார்
சபை ஏறி
சென்ற பின்னே

சந்திக்க சென்று விட்டால்
சங்கடங்கள் தோன்றிடுமே
நிற்பதற்கு
அவர் முன்னே

நம்மை
படிகட்டுகளாக
பயன்படுத்தி
பதவி அதனை
பெற்று விட்டு
அடுத்த கட்டம்
நகர்வதற்கு
ஆசை அது
கொண்டிருப்பார்
அதிலும்
அரசியலில்
இதெல்லாம்
சகஜம்
என்பார்

இவனின்
தராதரம்
கண்டுவிட்டு
அடுத்தவனை
தேடி சென்றால்
அவனும் அவ்வாறே
ஆற்றிடுவான்சொற்பொழிவு

உணர்ந்து கொள்ளும் அறிவு இருந்தால் நாமோ உயர்ந்திருப்போம்
எந்நாளோ !

அடுத்தவன் தலைமை ஏற்க
நம் கையில்
மை
வைப்போம்
சிந்தித்தோம் என்றால்
சிறந்து இருப்போம்

இல்லையேல்
நம்
முகத்தில்
(கரு)மை
இருக்கும் !

எழுதியவர் : த பசுபதி (6-Sep-18, 11:37 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : arasiyal
பார்வை : 1170

மேலே