ஆசான்
நீ கற்றதை
எமக்கும் கற்பித்து ..
உன்னிலும் மேலோனாய்
என்னையுமாக்கினாய் ...
தன்னலமில்லா தொண்டாற்றி..
தரணிக்கே அறிவூட்டினாய்...
இருள் அகற்றி
ஒளி ஏற்றி
புகழ் கொடுத்(தாய்) ..
எனக்கு இரண்டாம் தாயாய் நீயும்..
உன் முடிவிலாத் தாய்மையின் ஒரு சிசுவாய் நானும் ..
பத்திரமாய் பாடம் புகட்டி
சூத்திரமாய் சூட்சமும் கற்பித்(தாய்) ..
தடியெடுத்து தயக்கம் அகற்றினாய் ...
தரம் தாழ்ந்து தடம் தவறுகையில்
அறம் கொண்டு அரவணைத்(தாய்)...
இயலா(மை) ..
முயலா(மை) ..
இம்(மை)களை
உன் கூர்(மை) கொண்டு
இல்லா(மை) யாக்கினாய் ...

