உன்னோட பின்புலத்தை விசாரிக்கணும்

அய்யா நான் கண்ணனோட வகுப்பில படிக்கிறேன். அவனக் கொஞ்சம் என்னோட அனுப்பி வையுங்க?

உம் பேரு என்னடா?

எம் பேரு கபேஷ்ங்க அய்யா.


ஏன்டப்பா கப்பேசு எம் பையன எதுக்குடா கூப்படற?

அவன பக்கத்தில இருக்கிற பூங்காவுக்குக் கூட்டிட்டு போயி பாடதுதில் சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேக்கணுங்க அய்யா.

நீ அடிக்கடி எங்க வீட்டுப்பக்கம் வர்றது கண்காணிப்புக் கருவில பதிவாகி இருக்குது. உன்னப் பாத்தா படிக்கற பையன் மாதிரி தெரில. நீ அநேகமா படிக்கற பசங்களக் கெடுக்கிற மாணவர் அமைப்பைச் சேர்ந்தவனா இருக்கணும். நீங்கெல்லாம் தேர்வு அறைக்கு முக்கியமான வினாக்களுக்கு சுருக்கமான விடைகளைத் துண்டுத் தாள்கள்ல எழுதிட்டு போய் அதைப் பார்த்து எழுதியும் மற்ற மாணவர்களின் விடைத் தாள்களைப் பாத்து எழுதி கொறஞ்சபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று ஆசிரியர்களுக்கு இடையூறு செய்யற அமைப்பச் சேர்ந்த மாணவனா இருக்கணும். நல்லா படிக்கற எம் பையனத் திட்டமிட்டு கெடுக்கறவனா இருக்கிற மாதிரி தெரியுது.

அய்யா, அய்யா நான் அப்பிடிப்பட்ட பையன் இல்லீங்க அய்யா.

உன்னோட வயசு என்னடா.

இருபது முடிஞ்சிருங்க அய்யா.

கல்யாணம் செஞ்சிருக்க வயசில நீ பதினோறாம் வகுப்பு மாணவன். உனக்கு நல்ல புத்தி இருந்திருந்தா ஒழுங்காப் படிச்சு இளம் கலை/அறிவியல் வகுப்பில மூன்றாம் வருசம் முடிக்கற நிலையில இருக்கணும்.

என்ன மாதிரி நெறையப் பசங்க பள்ளில படிக்கறாங்க அய்யா.

உங்க மாதிரி ஒதாவக்கரைப் பசங்களாலதான்டா நல்ல மாணவர்களும் கெட்டுப் போறாங்க. நீ எங்கடா குடியிக்கற?

அய்யா திடீர் நகர்ல எங்க வீடு.

உம் மேல எனக்குப் பலத்த சந்தேகம். நீ வேற எந்தெந்த அமைப்பைச் சேர்ந்தவனோ? உன் பின்புலத்தைக் கண்டிப்பா விசாரிச்சு உண்மையைக் கண்டறியணும். காவல் துறைக்கும் உன் பள்ளித் தலைமை ஆசிரியருக்கும் புகார் மனு குடுக்கப் போறன்டா.

(கண்ணனைத் தேடிவந்த பையன் ஓடிக்கொண்டே) உங்களால என்ன ஒண்ணும் செய்யமுடியாது. நீங்க தலைகீழா நின்னாலும்
என் பின்புலத்தைக் கண்டுபிடிககண்டுபிடிக்க முடியாது.

எழுதியவர் : மலர் (6-Sep-18, 10:15 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 113

மேலே