தோழி

ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு .... மொத்தம் அஞ்சு கார்டு இருக்குது... கீத்து, ரூபா, மினி, லேகா, தனு ... அஞ்சு பேருக்கு அஞ்சு கார்டு ... அச்சச்சோ நாகா வ விட்டுட்டேனா!!! பரவால்ல ஒரு சாக்லேட் வாங்கி குடுத்து அட்ஜஸ்ட் பன்னிக்கலாம்... சாயந்திரம் ஆச்சு இன்னும் யோசிச்சு யோசிச்சு நேரத்த வீனாக்கிட்டு இருந்தேன்னா எல்லாரும் கெளம்பி வீட்டுக்கு போயிடுவாங்க... சீக்கிரம்டா சீக்கரம்...

சரி சரி அப்படிலாம் முறைக்க வேணாம் !!! இன்னைக்கி பிப்ரவரி 14 ... அதான் இந்த ஜோரு... நாம நம்ம அன்ப குடுத்துடுவோம் ... திரும்ப லாம் எதிர் பாக்க வேணாம்... என்ன நாஞ்சொல்றது?? எதுனா ஒன்னு கிட்ட இருந்து பதில் வந்தா லக் னு வச்சிப்போம் ... வரலேன்னா அடுத்த வருஷம் இன்னும் கடுமையா உழைக்கலாம்... இருவத்தஞ்சு கார்டு இருவத்தஞ்சு பேருக்கு குடுத்துடலாம்... ஹாஹா... இப்ப இதுல அழகான கையெழுத்துல ஐ லவ் யு னு எழுதனும்... எழுத்த பாத்ததும் கிழிக்க மனசே வர கூடாது. ம்ம்... ம்ம்... இருக்கவே இருக்குறா ஓவிய சிகாமணி என் குட்டிமா மிஸ் சைலன்ட் ...

"ஓய் குட்டி ... மிஸ் சைலன்ட் மேடம் ..."

மும்முரமா ஏதோ வரைஞ்சுட்டு இருக்குறா அவ. அப்படி என்ன வரைஞ்சுட போறா? ஏதோ ஒரு மாந்தோப்போ இல்ல பூந்தோப்போ இருக்கும்... அதுல முகம் காட்டாம ஒரு பையனும் பொன்னும் இருப்பாங்க... இதே வேலையா போச்சு இவளுக்கு...

"ஓய் என்ன வரைஞ்சுட்டு இருக்குற காட்டு ... அட காட்டுன்னா ஓவரா பன்னிகிட்டு... "

அவ கைல இருந்த சார்ட் பேப்பர வலுக்கட்டாயமா புடுங்கி பாத்தேன்... சொன்னேன்ல பாரு... ஒரு தண்ணி போற ஓடைய ஒட்டி நெறய மரம் இருக்குது... ஒரு ஆணும் பொண்ணும் நெருக்கமா இருக்குறாஙக... நிலா வெளிச்சத்துல நிக்குறவங்க மூஞ்சி தெரில...

"அட என்ன மா இது... யாரு இவங்க? இப்படி வரைஞ்சு தள்ளிட்டு இருக்குறியே என்ன மேட்டரு??"

வாய்பேச முடியாத அவ கைய காத்துல ஆட்டி ஆட்டி பதில் சொன்னா... பாதி தா புரியும் மீதீ நானே கற்ப்பனை பன்னிப்பேன்.

©®€¢°°`÷°$¶€]£°${£]~∆$°£]~÷$°£}€∆£°£¶~

"என்னது இந்த பொண்ணு நீயா?? சரிதா சரிதா... இந்த பையன் யாரு?? நோஞ்சானாட்டம் இருக்குறான்... பிரச்சன னு வந்தா அடி தாங்குவானா??"

¶$=¢}∆`×~℅|ו{∆£°℅`°¢×∆∆℅$°`

"தோ.. டா... கோவத்த பாரு... அது கெடக்கட்டும் பையன்க்கிட்ட சொல்லிட்டியா? இல்ல இனிதா சொல்லனுமா??"

=™•÷`÷~^¶∆$$[{~~¶®|}™€×`°|×∆€[€

"இந்த மாதிரி ஒரு எடத்துக்கு கூட்டிட்டு போயி தா சொல்லுவியா ... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... அது இருக்கட்டும் நீ ஒன் கூப்புட்டதும் ஒனக்காக அங்க வந்து காத்து கெடப்பானாக்கும்... நல்ல நம்பிக்கை.."

¶¶∆°£{[`¶{$}£™~׶•{£[£×}~[€=$}~]¶$¶€℅

"வாய மட்டுமில்ல எல்லாத்தயும் சேத்து மூடிக்கிட்டே போதுமா? ஒன் ஓவியத்தயும் காதல் காவியத்தயும் ஒரு ஓரமா வச்சிட்டு எனக்கு இந்த கார்டுல எல்லாம் ஐ லவ் யூ னு என் ஆளுங்க பேரு எல்லாம் எழுதி குடுடா குட்டி... ப்ளீஸ் ப்ளீஸ்..."

கேட்டுட்டே அவ கையில இருந்த அவ வரைஞ்சு வச்சிருந்த படத்த புடுங்கி ஒரு ஓரமா வீசிட்டு என்க்கிட்ட இருந்த கார்ட்ஸ் எல்லாம் தினிச்சேன்...

∆•×|{°€×}`∆€]=$¶

அம்மாடீ இம்புட்டு கோவ காரியா இருப்பான்னு தெரியாம போச்சே... கையில வச்சிருந்த பென்சில் சீவுற கத்திய ஆட்டி ஆட்டி பேசும் போது கொஞ்சம் பயமா வேற இருக்குது... தேவையா எனக்கு இதெல்லாம்... ஏதோ திட்டிட்டு வேகமா எழுந்து கெளம்பிட்டா...

"ஹே எங்க ஓடுற இரு... இந்தா ஒன் ஓவியத்த எடுத்துக்க... தூக்கி வீசினதுக்கு சாரிபா..."

நா பேசுற எதயும் காதுல வாங்கிக்கல... ஆபீஸ் ரெஜிஸ்ட்ரி ல அவுட் டைம் போட்டு வேக வேகமா சைன் போட்டுட்டு கெளம்பிட்டா... இப்ப அவள வேற சமாதான படுத்தனுமா? ஓடு ஓடு னு எனக்கே சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சேன்...

"ஓய்... இரு இந்த படத்த நாளைக்கு அழகா பிரேம் போட்டு எடுத்து வர்றே..."

அவ அவ ஸ்கூட்டி அ நெருங்கி சாவி போட்டு ஸ்டார்ட் பன்னிட்டா...

"அழகானு சொன்னது... அழகான பிரேம் போட்டு தர்றேன் னு அர்த்தம்... என்ன பாக்குற... நீ வரைஞ்ச இந்த நோஞ்சான நா எப்படி அழகா ஆக்க முடியும்..."

சிரிப்பா னு எதிர்பாத்தேன்... இல்ல நடக்கல... சாமாதனம் பன்றது கொஞ்சம் கஷ்டந்தா... அவளுக்கு பதிலா அவ ஸ்கூட்டி என்ன பாத்து உர்ர்ர் உர்ர்ர் னு உருமி காட்டுது...

இரு நானும் வர்றே... சொல்லிட்டு பின்னாடி ஏற போனேன் அதுக்குள்ள பைக் எடுத்துட்டு கெளம்பிட்டா...

ஸ்கூட்டிய தெறத்தி புடிக்குறது பல்ஸர் க்கு பெரிய கஷ்டமா என்ன??? ஓடு ஓடு வேகமா போயி வண்டிய எடு.. நா என் வண்டிய எடுத்துட்டு பின்னாடி போனேன்...

"மேடம் கோவத்துல வீட்டுக்கு போற ரூட்டு மறந்துடுச்சா? ஒன் வீடு பின்னாடி இருக்குது... "

காதுல விழுந்துருக்கும்... கேக்காத மாதிரி போறா... அவ்ளோ அடம்... வர்ற கோவத்துக்கு புடிச்சு நாலு சாத்து சாத்தனும் போல இருக்குது"

"இருட்டிடுச்சு வண்டிய திருப்பு பைத்தியம்...இருட்டுல சுத்தினா இருமல் காய்ச்சல் வருமாம் கேள்வி பட்டதில்ல??? "

மொக்க ஜோக் என்ன கை விட்டுடுச்சு... கோச்சுக்கிட்டு போறதுக்கு வேற எடமா கெடைக்கல இவளுக்கு?? அவசரத்துக்கு ஒதுங்குற எடம் மாதிரி இருக்குது அதுக்குள்ள போயிட்டு இருக்குறா... ஸ்கூட்டி ய ஓரமா நிப்பாட்டிட்டு எறங்கி நடக்குறா பாரு... இந்த முள்ளு காட்டுல எதுனா குத்தி டயர் பஞ்சரா ஆயிட்டுனா திரும்ப எப்படி போறதுனு யோசிச்சுருப்பாளோ!!! தெளிவுதா...

"ஓய் அதான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல... வேற என்ன பன்னினா சமதானம் ஆவ சொல்லு... கொஞ்சம் நின்னு தா பேசுறது... இப்படியே நடந்துட்டே இருந்தா எப்படி? இதுக்கு மேல உள்ள போனேன்னா விச பூச்சிங்க இருக்கும் , பாம்புலா கூட இருக்கும், அஞ்சு தல நாகம் ஒன்னு இருக்குது ஒரே கொத்துல அஞ்சு கடி கடிச்சுடும்... "

இருட்டுல அவ சிரிச்சாளா இல்லியானு கூட தெரிலயே... தெரிஞ்சாவாச்சும் மேற்கொண்டு மொக்க போடலாமா வேணாமா னு முடிவு பன்னி இருந்துருக்கலாம்...

ஒரு வழியா நின்னுட்டா... ஒரு வேள மூச்சு வாங்க நிக்குறாளோ... அடுத்து மறுபடியும் நடக்க ஆரம்பிக்குறதுக்குள்ள ஓடி போயி புடிக்கனும் ஓடு...அதான பாத்தே!!! மேல போக முடியல, ஓடை இருக்குது... அதான் நின்னுட்டா... அங்க என்ன வெறிக்க வெறிக்க பாக்குறா??? என்ன தெரிகிறது????

அட!!! வேக வேகமாக கையில் வச்சிருந்த அவ வரைஞ்ச படத்த பிரிச்சு பாக்குறே... இந்த ஓடை தண்ணி , மரஞ்செடி புதருங்க, இந்த நிலா வெளிச்சம் , பொண்ணு எல்லாம் அப்படி அப்படியே இருக்குது... பையன தவிர... பையன் ஏன் இல்ல... அதான் நா இருக்குறேன்ல... அப்படீனா???

அவ திரும்பி பாத்து சிரிக்குறா..

¶=|÷¶•℅£}¶¶`

"ஹைய்யோ!!!! ஐ லவ் யூ ட்டூ டீ... ட்டூ மட்டுமில்ல த்ரீ ஃபோர் ஃபை இதோ இந்த அஞ்சு கார்டும் ஒனக்கு தா வாங்கிட்டு வந்தேன்... அவ கிட்ட நீட்டினே!!!"

இந்த வாட்டி ஜோக் வொர்க் அவுட் ஆயிடுச்சு.. சிரிக்குறா... சிரிச்சா தேவத மாதிரி இருக்குறா என் குட்டிமா... இனி எல்லாம் அப்படிதா கண்டுக்காத... ஓடி போயி கைய புடிச்சுக்கிட்டேன்... இப்படியே இங்கயே இருந்துரலான்ல... நீங்க எடத்த காலி பன்னுங்க போங்க... நாங்க தனியா பேசிட்டு வர்றோம்...


"ஆமா டீ குட்டிமா நா என்ன அவ்ளோ நோஞ்சானாட்டமா இருக்குறேன்... அப்படி வரைஞ்சு வச்சிருக்குற!!! அய்யே மூஞ்ச பாரு..."

எழுதியவர் : (6-Sep-18, 11:48 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 371

மேலே