கருத்துகளைப் பகிருங்கள்

தன்னுடைய கருத்துகளை பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என மனதில் நினைத்தால்.....மனதில் தோன்றுவது... நான் ஏன் என் கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என் ஒருவனால் இந்த உலகம் மாறிவிட போகிறதா இல்லை ஏதேனும் கருத்துப்புரட்சி ஏற்ப்பட போகிறதா இல்லவே இல்லை இதற்க்கு சாத்தியமே இல்லை...... பிறகு ஏன் நான் என் கருத்துகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்? நான் என்ன தமிழில் புலமை பெற்றவனா?,அரசியல் ஈடுபாடு உள்ளவனா?,சமுதாயத்தை வேறு கோணத்தில் பார்ப்பவனா?, பகுத்தறிவாளனா? என பல்வேறு கேள்விகள் மனதில் எழுகின்றது ...... ஏன் உங்களது கருத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது அதற்கு தடை என்ன என கேட்டால் அதற்கு பதில் மேற்கூறிய அனைத்து கேள்விகளும் பதிலாக கிடைக்கும்... சக மனிதனையோ, சமுதாயத்தையோ,தேசத்தையோ,உலகத்தையோ மாற்றுவதற்கு அல்லது ஏதேனும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு மட்டுமே தான் கருத்துகள் பகிர்ந்து கொள்ள படுகிறதா? இல்லை... கருத்து என்பது உங்கள் எண்ணங்களின் வெளிப்பாடு நீங்கள் அதை வெளிக்கொணராவிட்டாலும் அனைத்தும் உங்கள் நினைவில் தான் இருக்கும். அனைவருக்கும் உள்ள கூச்ச சுபாவத்தாலும், தாழ்வு மனப்பான்மையாலும், பயத்தாலும் இன்னும் எண்ணற்ற காரணங்களாலும் அனைத்து கருத்துகளும் மனதிலே சிறைபட்டு புதைக்கப்பட்டு விடுகின்றன.. இவ்வாறு பல காரணங்களால் புதைக்கப்பட்ட கருத்துகளை வெளியே கொண்டுவர என்ன செய்ய வேண்டும்? நம்முடைய மனதில் பட்ட கருத்துகளை பயமில்லாமல் கூற வேண்டும். இது எதைச் சார்ந்த கருத்துகளாக இருந்தாலும் பரவாயில்லை,படிக்கும் இடங்களிலும்,வேலை செய்யும் இடங்களிலும், வீட்டிலும், வெளியிலும் என அனைத்து இடங்களிலும், பார்க்கும் செயல்களை பற்றிய கருத்து,அரசியல் பற்றிய கருத்து,வாழ்கைக்கான கருத்து என அனைத்தையும் மனதில் போட்டு புதைத்தால் மனதுதான் என்னாவது! எனவே சுதந்திரமாக உங்களது கருத்தை அனைவரிடமும் பகிருங்கள் வாழ்க்கையை சுவை உள்ளதாகவும் உண்மை உள்ளதாகவும் மாற்றுங்கள். கருத்துகள் புதையாமல் பார்த்துகொள்ளுங்கள்

எழுதியவர் : ச.ஜெரோம் சகரியா (7-Sep-18, 2:39 pm)
சேர்த்தது : ஜெரோம் சகரியா
பார்வை : 276

மேலே