குத்தீட்டி கொள்ளையர்கள்

குத்தீட்டி கொள்ளையர்கள்
குத்தீட்டிகளுடன் கொள்ளையர்கள்
ரீங்காரமாய் பாடிக்கொண்டு
சுற்றி சுற்றி வருகிறார்கள்
பாட்டை கேட்க மறுத்து
காதை மூடி கொண்டாலும்
எப்படியோ உள் நுழைந்து
பாடிவிட்டே பறக்கிறது
இவர்களிடம் தப்பித்து
வாழ்க்கை நடத்துவது அப்பப்பா !
எத்தனையோ ஆயுதங்கள்
எதுவுமே பயனில்லை
ஆகாயத்திலும் தரையிலும்
கேடயத்தை சுழல வைத்தாலும்
கிடைகும் இடைவெளியில்
அழகாய் நுழைந்து விடுகிறார்கள்
கண், காது மூக்கு
எது கிடைத்தாலும்
சட்டென முத்தமிட்டு
குத்தீட்டியை சொருகி விடுகிறார்கள்
“ஐயோ” என அலறுவதற்குள்
காத துரம் போய் விடுகிறார்கள்
முத்தமிட்ட இடங்களில்
அந்த கால பத்து பைசா
அளவில் !
தடித்துத்தான் போய் விடுகிறது
அப்படியே அறைந்து கொன்று விட !
சட்டென நம் கையால்
முத்தமிடும் போது
ஓங்கி அறைய
ஐயோ !
நழுவி பறந்து போய்
நம் கையே நம்மை
நாமே அடித்து கொண்ட
கொடுமை………
ஆயிரம் விஞ்ஞான முன்னேற்றம்
வாய் கிழிய பேசுகிறோம்
முத்தமிட்டு இரத்தம் உறிஞ்சும்
இந்த ஜந்துவை ஒழிக்க
இது நாள் வரைக்கும்
வழியேயில்லை