கவிஞனுக்கு அது காட்சி இன்பம்
பனித் துளிகள் சிதறிக்கிடந்த
மலரிதழ்களில்
குளிர்த் தென்றலும் வந்து தழுவ
மகிழ்ச்சியில் மௌன மலர்கள்....
இன்னும் கதிர் விரியாத வைகறைப் பொழுதில்
கவிஞனுக்கு அது காட்சி இன்பம் !
வைகறைப் பொழுது : இருள் பிரிந்து வெளிச்சம் வரும் நீலமும் சிவப்பும்
சேர்ந்த சூரியோதயத்திற்கு முந்திய அமைதியான காலைப் பொழுது .