பெட்ரோல்

மண்ணுக்குள் மாண்டுகிடந்த நீ,
விண்ணுக்குள் மறைந்ததேனோ?
கண்ணுக்குள் கண்ணாவாய்!
எண்ணெய்க்கு அண்ணாவாய்! -
என்றும் எரிந்து மறைவாய் நீ,
இன்றோ எம் வயிறு எரித்தாயே!
தொட்டால் சில்லிடும் – நீ,
பட்டால் பொசுக்கிடும் தீ!
எதிர்மறை குணத்தால் நீ,
எதிரியை குழப்பிடுவாய் நீ!
எளியோரும் நொந்திட்டார்.- ஏனைய
வலியோரும் சிந்தித்தார்.
வல்லரசு வேண்டுமுன் நமக்கு
நல்லரசு வேண்டுமப்பா.
நலம் விரும்பும் ஏழைகள் தம்
களம்கண்டு வெல்லவேண்டும்.
மலையேறும் பெருமாளாய்,
விலையேறும் பெட்ரோலே!
தலைதப்பும் நாள் தேடி,
தரணியெல்லாம் ஏங்குதப்பா!

எழுதியவர் : (11-Sep-18, 7:13 am)
பார்வை : 76

மேலே