தமிழ்த் தலைமை

திணை விதைத்து முப்போகமி ளைந்த
மனை யெலாம் பாழாக்கிப் ; பல
வினைசெய்து ஊமைகளின் உறையழித்துச் சில
சுனை யழித்துப் புகலிடை யாக்கி;
அணை யமைத்துக் தடுக்கும் நீரை
தி(ண்)ணைக்கு யழைக்கும் மானிடமெலாம் ;
நீரின்றிவ் வுலகிலையென்ற வள்ளுவ மறந்த
பாரில் தனக்கென்று வாழு மறிவிலிகள் !
கன லெய்தும் வற்றாதக் கானகம்
பனை வற்றிப்பாலை யாகும் நிலையோ !

பண்டைப் பேசித் தேர்ந்தவ னெல்லாம்
தன் னினமறந்துக் குலமழித்தப் பகையன் !
இன்றைப் பேசித்தீர்பவ னெல்லாம் நாளை
நின் னிலம் காக்கு மாந்தராவரோ !
என்றும் பிறரை நோக்கும் எம்மினமென்று
நின்றுத் தனித் தலைமை ஏற்குமோ !
நன்று செய்தே அறம்வளர்த்தக் கூட்டமன்றே
வஞ்சத்தால் கர்மத்தை மறைத்தாலும் தினமும்
தோன்றும் பகலவனாய் தோல்வியே யஞ்சும்
தமிழனாய் மீண்டும் தலையெடுக்க வேண்டுவனே !


- தமிழ்த் தலைமை நாடன் ; மா. சங்கர்

எழுதியவர் : மா.சங்கர் (10-Sep-18, 9:48 pm)
சேர்த்தது : ச ங் க ர் ராஜா
பார்வை : 98

மேலே