கலைஞர் தமிழ்

கன்னி தமிழ் பால்
கொண்ட
காதலால்
கருதொருமித்து களமிறங்கி
கவி பாடும் திறன் மிகுந்து
புவி மேலே
புதியதோர்
காவியம் படைத்த
எந்தன்
முத்தமிழ் அறிஞர்
மூத்த தலைவர்
கருணையால் நிதியையும்
நீடுழி வாழ
ஏழை மக்களுக்கு
எப்போதும் கிடைத்திட
முன்னேற்ற
திட்டங்களை தீட்டி
திராவிட கழகத்தில்
உதித்த சூரியனே !

அஞ்சுகம்
பெற்ற
அன்பு பிள்ளை
நீ
அயராது உழைக்க எண்ணி
சிந்தையிலே
புறப்பட்ட சீர்மிகு எண்ணங்களில்
செந்தமிழ்
மொழியினிலே
செயற்கரிய
நூல்கள் செய்தாய் !

நையாண்டி தமிழிலும் நகைச்சுவையாக
நீ
பேச
ரசிப்பவர்கள்
எத்தனை பேரோ !

கன்னி தமிழாம்
கன்னியை காண
கண் தேடி வருமாம்
ஆனால்
உன் தமிழை தேடி கோடானு கோடி கூட்டம் அங்கே குவியும்

உன் மந்திர குரலில்
மாயம் அது
புரிவாய்
மயங்கி தான் போவார்
மொந்தையிலே
கள்ளை அருந்தியவர்
போல !

எத்தனையோ திறன் கொண்டாய்
அத்தனையிலும்
புகழ் கண்டாய் !

அல்லும் பகலும் அயராது உழைத்து
எல்லையில்லா
புகழை கொண்ட
மாபெரும் தலைவன்
நீ

கன்னி தமிழை காதலித்து
முத்தமிழை
ஈன்றெடுத்த
வி(ய)த்தகு கவிஞன்
நீ

நரை விழுந்த
பருவத்திலும்
முறையாக
முன் நின்று
முத்தமிழ் கவியரங்கம்
எத்தனையோ
நடத்தி விட்டாய்

அரசியலில் ஆர்பரித்தாய்
வசனத்திலே
சிங்க குரலிலே
கர்ஜனை செய்து வைத்தாய்

கதையோ காவியமோ
சுவை பட
ருசிக்க வைத்தாய்

உன்னை போல
உன்னத தலைவனை
உலகம் காண
இனி என்ன தவம்
செய்திட
வேண்டுமோ !

அரசியலில் ஆலமரம்
பூமியில் புதைந்த
உன்
அனுபவ வயதோ தொண்ணுற்றிஐந்து

உன் விழுதுகளை
விருப்பமாய்
பிடித்திருப்பவர்கள்
பிடித்திருப்பவர்கள்
எத்தனை பேரோ

மந்திரி சபையில் ஒரு
ராஜ தந்திரி

முத்தமிழ்
மன்றம் அதில்
வி(ய)த்தகு
கவிஞன் நீ

திரையில் பின்னும்
கதை வசனம்
என்னும் காவியம் படைத்தவன்
நீ

நூல்கள் பலவற்றை
நூதனமாக
தந்தவர் நீ

தமிழ்த்தாய்க்கு
செம்மொழி தந்த
விந்தையான
சிந்தை உள்ளவன்
நீ

செந்ஞாயிறு கொண்ட
சீறும் சிறப்பும்
மிக்க
அமைப்பை தந்தவன்
நீ

மூக்கு கண்ணாடியும்
முள் பேனாவையும்
முழுமையாக
பயன்படுத்தி முன்னேற்றம்
கொண்டவன்
நீ

எத்தனை கவிஞர்கள்
மண்ணிலே முளைத்தாலும்
விண்ணிலே
முளைக்கும் ஒரே
சூரியன்
நீ

ஏழை எளிய
மக்களின்
இன்னல் களை
சுட்டெரிக்கும்
சூரியன்
நீ

அண்ணா சொன்னார் என்று
(இராம) சந்திரனோடு
நட்பு வைத்த சூரியன்
நீ
இருந்தாலும்
இரவு பகல்
அயராது உழைத்த
திராவிட போர் வாள்
நீ

திகட்டாத தமிழை தந்த நீ
திரும்பி வாரா இடம்
சேர்ந்தாய்

உன்னை தமிழ் என்று எண்ணி
என்னை நான்
தீட்டி கொள்கிறேன்

விண்ணை ஆளும்
என் தலைவனே
வந்து எம்மை
ஆசி செய்வாயா !!

எழுதியவர் : த பசுபதி (7-Sep-18, 12:40 pm)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 1498

மேலே