தமிழ் பற்று
கவியரங்க மேடை அது கிடைத்தற்கரிய பேறு இது
வேடிக்கையாக நிற்பவர் சிலர்
வாடிக்கையாக
வருவோர் பலர்
கவிபாட வந்தோர் சிலர்
என் வாய்ப்பு
வந்தது
தந்தமைக்கு
நன்றி சொல்லி
நான் பாட தொடங்கும் போது
அரங்கத்தில் ஆரவாரம் - நான் வந்ததற்கு
அல்ல
நின்றதற்கு
அறிமுக
மேடையல்லவா
என் கவியை
யார் கேட்பார்
என்று இருந்தது
வந்து விட்டோம் படி ஏறி
செய்துத்தான்
தீரவேண்டும் என
எனை தேற்றி
ஆரம்பித்தேன்
ஒரு பாட்டு
அதிர்ந்தது அரங்கமே
தித்திக்கும் தேனமுதாய்
சொற்கள்
புதைந்திருக்கும்
எத்திக்கும்
புகழ் பரப்பும்
தமிழ் இது வாழ்க என்று
தொடங்கிய
ஒரு சொல்லே
எனை
ஏற்றுக்கொண்டது
அரங்கத்தின் உள்ளே
வாய்ப்புகள் தந்தால் தானே
வாக்கினில் வருவது தெரியும் !
எழுத்துக்களில்
ராஜா எல்லாம்
ஏறி அமர்ந்த மேடையது..
தமிழ் வெண்பாக்களில் விளையாடி விட்டு
என் பால்
விளையாட வந்தார்கள் போல
கவியரங்கம் இனிதே நிறைவுற்றது
ஏனெனில்
தமிழல்லவா!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
