தமிழ்
கன்னி தமிழை
காதலிப்பது
கவிஞர்களுக்கு
பேரின்பம்
எத்தனை முறைதான்
முத்தமிடுவார்களோ
இந்த
பேனா முனையால் !
எழுதுகோளின் மை
சொட்ட சொட்ட
கன்னி தமிழவள்
தாயானாள்
கவி என்றும்
கதை என்றும்
அவள் ஈன்றெடுத்த
காவியம் ஏறாளம்
முத்தமிழை
பெற்று தந்த
உன் முழு விலாசம் தேடிய போது
உன் வயதோ
ஈராயிரம் !
-பசுபதி