ஆசான்

பிஞ்சின் நெஞ்சில் நிறைந்தவர் இவர்
வாழ்க்கைப்பாடம் கற்றுக்கொடுப்பவர்
தொடக்கப்பள்ளியில் தோழனானவர்
நடுநிலைப்பள்ளியில் நடுநிலையானவர்
மேல்நிலைப்பள்ளியில் மேன்மையளிப்பவர்
இளநிலைப் படிப்பில் இதயம்தொடுபவர்
முதுநிலைப் படிப்பில் முத்தை கோணர்பவர்
மந்தை மேய்க்கும் மெய்ப்பனவர்
மனதை காக்கும் காவலனவர்
சிறப்பாய் கூறி சிறப்பை தருபவர்
சிந்தனை மெருகேற்றி சிந்திக்கவைப்பவர்
அடிப்பார் உதைப்பார் அரவணைப்பார்
அந்நியருடன் அடிசேரவொட்டார்
கன்னியர் என பிரித்துப்பாரார்
கன்னியர் கண்ணீர் காணவொட்டார்
சாதனைகள் பின்னே ஒழிந்துக்கிடப்பார்
முன்னே அழைத்தால் முகம்காட்டமாட்டார்
சரித்திரத்தின் சரிபாதியவர்
மாணவச்சிற்பத்தின் சிற்பியவர்
கண்டுவணங்கினால் மனஅன்புடன் பேசுவார்
கண்டுகாணாமல் போனால் கவலைகொள்ளார்
ஒரே முகம் தான் ஆனால் பல இன்முகங்கள் இவரிலே
அணைக்கும்போதும் அடிக்கும்போதும் அன்னையிவர்
காக்கும்போதும் கண்டிக்கும்போதும் தந்தையிவர்
உடனிருக்கும்போதும் உயர்த்தும்போதும் அண்ணனிவர்
கரம்பிடிக்கும்போதும் கண்ணீர்துடைக்கும்போதும் தங்கையிவர்
அவரே ஆசிரியர் பெருமான், இவர் ஒருத்தர் அல்ல, நான் குறிப்பிட்டவர் நூறில் ஒருத்தர் ஆயிரத்தில் ஒருத்தர் லட்சத்தில் ஒருத்தர் கடமைக்கு உழைக்காமல் கட்டமைக்க உழைப்பார் இவர் , எதிர்பார்ப்பில்லாது எல்லாத்தையும் எமக்களிப்பவர் , இவர் ஆறிலிருந்து அறுபது வரைக்கும் ஆசான். இல்லை அறுபதென்ன அடங்கும் வரைக்கும் இவர்தான் என் ஆசான், எத்தனையோ வெற்றியாளர்களின் வெற்றிக்குரி இவர், காலத்தால் அழிக்க முடியா கல்வெட்டிவர்
இவரே ஆசான் இவரே ஆசிரியர்..