பாரதி பேனா

உருவம் இருந்தும் உணர்வுகளற்ற உயிர்களுக்கு உளியாய் மாறியது உனது பேனா!

உடைந்தே விழும்  நிலையிலும் உயிர்த்தெழ
உறுதி தந்தன உனது பேனா !

சோர்ந்தே வீழ்ந்தாலும் அந்நியனைச் சார்ந்து வாழந்ததில்லை உனது பேனா!

காக்கைக்கு உணவிட்டே
உன் கால் வயிற்றுக்கு உணவில்லையெனினும்
காகிதத்திற்கு உணவிட்டது உனது பேனா!

தேஷத்தில் பலர் வேசமிட்டாலும் விடுதலைக்காய் கோசமிட்டது உனது பேனா !

தேடிச்சோறு தின்றாலும் ஓடி விளையாடு பாப்பா என்றே உரக்க சொன்னது உனது பேனா!

ஒலிபடைத்த கண்ணும் உறுதி கொண்ட நெஞ்சும் ஒன்றாய் எழுந்துவர அழைப்பிட்டது உனது பேனா!

நெடுவென நெட்டைமரங்களாய் நின்றோர்களுக்கெல்லாம் நெற்றிப் பொட்டில் சுட்ட அக்னிக்குஞ்சு உனது பேனா !

சாத்திரம் ஒழித்தே புது மனித சூத்திரம் செய்திட ரெளத்திரம் பழகியது உனது பேனா!

இன்றும் தமிழை தலைமிர்த்திட அன்று தலைகுனிந்தது உனது பேனா !
என்றும் கம்பீரமாய் நிற்கிறது
உனது பேனா!
உனது படைப்புகளில்.

சுட்டித்தோழி சுபகலா.

எழுதியவர் : சுட்டித்தோழி சுபகலா (11-Sep-18, 2:58 pm)
Tanglish : baarathi pena
பார்வை : 52

மேலே