தமிழ்க்குயில் பாரதி

பாரதி பாரதப் பாட்டுக் குயில்
பாரவர் பாடிய பாட்டு க்களை !
பாரதில் எத்தனை தேசக்கலை
பாடிடு ! பாடிடு ! வீரத்துடன் !
பாண்டிய நாடதின் முத்துக்களை
பாட்டினில் சேர்த்திட்டார் வார்த்தையென !
தோண்டிடத் தோண்டிட ஊறும்கருத்
தூற்றவர் பாடலென் றுரைப்பேனே!

நாட்டினிலே கொண்ட காதலினால்
நல்ல கவி பல பாடி வைத்தார் !
பாட்டினிலே கொண்டபக் தியில்பலர்
பாட்டில் அவரையும் பாடவைத்தார்!
கூட்டுற வாலே நாட் டையுயர்திடும்
கொள்கைப் பலப்பல பாடிவைத்தார்!
கூடிவாழும் இன்பம் கோடியென்றே
கூடியிப் போரைப் பாடவைத்தார்!

செந்தமிழ் நாடெனும் பெயர்கேட்டு
சிந்தை மிகவுங் களித்திருந்தார்!
வந்தே மாதரம் என்ப தனைஉயிர்
வாக்கிய மாக்கிக் கொண்டிருந்தார்!
சிட்டுக் குருவிதனைக் காட்டிபல
சிந்தனை பெற்றிடச் செய்தார்!
எட்டுத் திசைகளும் சென்றே கலைச்
செல்வங்கள் கொணர்ந்திடச் சொன்னார்!

" விட்டுக் கொடுத்திட லாமோ?நாடு
வௌ¢ளை யருக்குச் சொந்தமாமோ?
விட்டு விரட்டிட வேண்டும், அதில்
வெற்றியும் பெற்றிடவேண்டும் " - என்றே
தட்டி எழுப்பி நமை விட்டார், இனி
தயங்கிட லாகாது என்றார்! இது
மட்டிலும் அவர்செயல் அல்ல இன்னு
மாயிரம் செயல்பல உண்டு !
பாரதி பாடலை படித்து வந்தேன்!
பாநலம் யாவையும் படித்துவந்தேன் !
நீரந்த பாக்கியம் பெற்றதுண்டோ? தமிழ்த்
தாயவர் போல்பிள்ளைப் பெற்றதுண்டோ?

- என்றும் பாரதியின் நினைவுகளுடன்
தில்லை. கவி இராசன்

எழுதியவர் : தில்லை. கவி இராசன் (11-Sep-18, 11:48 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 81

மேலே