பாரதியின் பா நயம்

பாரதியின் பா நயம்
சொல்லேரும் பொருளேரும் சேர்ந்துஅவர் பாவேறும் !
கல்லார்கள் எல்லோரும் கற்றிடவே எளிதாகும்!
கன்னலாம் அவர்செய்யுள் கற்கண்டுச் சுவையாகும்!
இன்னிசையில் அதைப்பாட இனியதொரு விருந்தாகும்!
இந்நாடு உள்ளவரை இனியதமிழ் இசைவாழும்!
எந்நாடு சென்றாலும் எங்குமவர் பாடல்களே!
இறந்தவரும் எழுந்திடுவார் இனியபாவின் இசைகேட்க!
இறவாது அவர்புகழும் இவ்வுலகம் உள்ளவரை!
மறவாமல் நாம்படிப்போம் மாசற்றார் பாடல்களை !
மறவர்குலத் தமிழர்களே மகிழ்வுடனே வந்திடுவீர் !

- என்றும் பாரதியின் நினைவுகளுடன்
தில்லை. கவி இரான்

எழுதியவர் : தில்லை. கவி இரான் (11-Sep-18, 11:56 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 56

மேலே