கவி இராசன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவி இராசன் |
இடம் | : சிதம்பரம் (தில்லை) |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 5093 |
புள்ளி | : 50 |
முனைவர் , தமிழ் (கணினி) மொழியியல்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
ஊருக்கு உழைக்கின்றேன் என்று சொல்லி
உறவுக்கே பலன்சேர்க்கும் கூட்டம் உண்டு !
பேருக்கு பதவியிலே இருந்து கொண்டு
பேயாட்டம் போடுகின்ற கூட்டம் உண்டு !
வேருக்கு நீர்ஊற்றி வளர்த்திடாமல்
விளைச்சலுக்கே வருகின்ற கூட்டம் உண்டு !
பாருக்குச் சுமையாக இருக்கும் அந்தப்
பாவிகளின் முகத்தினிலே உமிழ்வோம் வாரீர் !
சுடு காட்டில் அலையும் பேய்!
வீட்டில் பெருஞ்செல்வம் வீதிவரைக் கிடந்தாலும்
நாட்டிற் கொன்றும் நலம்செயார் - ஏழைக்கும்
ஊட்டி மகிழ்ந்திடார், உள்ளத்தில் அவரே சுடு
காட்டில் அலையும் பேய்.
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
ஊருக்கு உழைக்கின்றேன் என்று சொல்லி
உறவுக்கே பலன்சேர்க்கும் கூட்டம் உண்டு !
பேருக்கு பதவியிலே இருந்து கொண்டு
பேயாட்டம் போடுகின்ற கூட்டம் உண்டு !
வேருக்கு நீர்ஊற்றி வளர்த்திடாமல்
விளைச்சலுக்கே வருகின்ற கூட்டம் உண்டு !
பாருக்குச் சுமையாக இருக்கும் அந்தப்
பாவிகளின் முகத்தினிலே உமிழ்வோம் வாரீர் !
வெண்ணிலவே!
கீழைக் கடல்தோன்றி, கீற்றாய் ஒளிபரப்பி,
ஆழி அதன்மே லாடிவரும் வெள்ளிப்
பேழை யொத்த வெண்ணில வேஇந்த
ஏழைக் கென்கொணர்ந் தாய்?
நல்ல பாட்டு
படிப்போர் படிப்பறிய பைந்தமிழ் வண்ணத்தில்
வடித்ததோர் ஓவியமாய்ப் பேசும்- கற்பனைத்
திளைத்திருக் கும் மனதிற் களிப்பூட் டுமதுவே
நிலைத்திருக் கும்நல்ல பாட்டு.
காதலியைத் தேடி . . . .
காதலியே உனைத்தேடி
கதிரவனைத் தூதுவிட்டேன்.
காலைமுதல் தேடிவிட்டு
காணாமல் போனதடி!
பேதையுனைத் தேடிவர
மேகமதைத் தூதுவிட்டேன்.
மின்னல் வந்துசேர்ந்ததடி
உன்னையங்கு காணவில்லை!
தேவியுனைத் தேடிவர
திங்களதைத் தூவிட்டேன்.
தேடியதால் தானேஅது
தேய்ந்து பிறையானதடி!
காதலியே உனைத்தேடி
கங்கையினைத் தூதுவிட்டேன்.
காணாமல் போனதடி
கடலினிலே சேர்ந்ததடி!
ஆற்றோரம் போகையிலே
காற்றினையே தூதுவிட்டேன்.
காணாமல் போனதனால்
கடும்புயலாய் வந்ததடி!
ஆற்றினிலே ஆடிவரும்
அலையினையே தூதுவிட்டேன்.
அங்குமில்லை யென்றதனால்
அக்கரையைச்
காந்தியின் வழியில்...!
அகிம்சை என்றொரு
ஆயுதம் ஏந்தி
இனிய சுதந்திரம்
ஈட்டித் தந்தார்!
உண்மை உரைத்தார்!
ஊனை மறுத்தார்!
எளியோர் வாழ
ஏங்கிய மனிதர்!
ஐயம் அகற்றி அறிவை வளர்த்தார்!
ஒற்றுமை உணர்வை
ஓங்கிடச் செய்தார்!
அன்னல் உரைத்த அறிவுரை ஏற்போம்.!
அன்பின் வழியில் அனைவரும் செல்வோம்.!
மீண்டும் சுதந்திரம் பெறவேண்டும்!
மீண்டும் சுதந்திரம் பெறவேண்டும்!
மீட்டுக் கொடுப்பவர் வரவேண்டும்!
சொந்த நாட்டிலே அடிமைப் பட்டோம்!
சொந்தங்களே எமைஎதிர்க்கக் கண்டோம்!
இடித்திடும் முன்னரே மின்னல்வரும்! - சுதந்திரம்
கிடைத்த பின்னரா இன்னல் வரும்?
விடியும் முன்னரே பெற்றதனாலோ
விடியலை இன்னும் காணவில்லை!
அந்நியன் ஒருவன் எமைஆண்டான்!- அவனை
அகிம்சை ஆயுதம் வென்றதடா!
புண்ணிய பூமியின் மனிதர்களே! இன்று
புதிய தலைமை அடிமை கொண்டார்!
எண்ணியதில்லை இதுவரையில், எங்களை
எங்களால் அடிமை கொள்வோம்(மென) !
உண்மையைப் பொய்கள் உயிர்பறிக்கும்
உலகினில் சுதந்திரம் நிலைத்திடுமோ? - அப்
பொய்யரைத் தீயினில்