முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
ஊருக்கு உழைக்கின்றேன் என்று சொல்லி
உறவுக்கே பலன்சேர்க்கும் கூட்டம் உண்டு !
பேருக்கு பதவியிலே இருந்து கொண்டு
பேயாட்டம் போடுகின்ற கூட்டம் உண்டு !
வேருக்கு நீர்ஊற்றி வளர்த்திடாமல்
விளைச்சலுக்கே வருகின்ற கூட்டம் உண்டு !
பாருக்குச் சுமையாக இருக்கும் அந்தப்
பாவிகளின் முகத்தினிலே உமிழ்வோம் வாரீர் !