காந்தியின் வழியில்

காந்தியின் வழியில்...!

அகிம்சை என்றொரு
ஆயுதம் ஏந்தி
இனிய சுதந்திரம்
ஈட்டித் தந்தார்!

உண்மை உரைத்தார்!
ஊனை மறுத்தார்!
எளியோர் வாழ
ஏங்கிய மனிதர்!

ஐயம் அகற்றி அறிவை வளர்த்தார்!
ஒற்றுமை உணர்வை
ஓங்கிடச் செய்தார்!

அன்னல் உரைத்த அறிவுரை ஏற்போம்.!
அன்பின் வழியில் அனைவரும் செல்வோம்.!

எழுதியவர் : கவி இராசன் (1-Oct-18, 9:01 pm)
சேர்த்தது : கவி இராசன்
Tanglish : gaandhiyin valiyil
பார்வை : 6489

மேலே