தற்புகழ்ச்சி கவிஞர் இரா இரவி

தற்புகழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !

இருக்கட்டும் மனதில்
வேண்டாம் உதட்டில்
தற்புகழ்ச்சி !

சொல்பவருக்கு மகிழ்ச்சி
கேட்பவர்களுக்கு எரிச்சல்
தற்புகழ்ச்சி !

பூனையை
யானையாக்கும்
தற்புகழ்ச்சி !

கர்வத்தின்
வெளிப்பாடு
தற்புகழ்ச்சி !

ஆணவத்திற்கும் அழிவிற்கும்
வழிவகுக்கும்
தற்புகழ்ச்சி !

தன்னடக்கம் தகர்க்கும்
திமிரை வளர்க்கும்
தற்புகழ்ச்சி !

மதிப்பதில்லை யாரும்
தன்புகழ் பேசுவோரை
தற்புகழ்ச்சி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (13-Sep-18, 2:02 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 258

மேலே